அண்ணா தற்போது இப்படியான மென்பொருளை யாரும் கணினிக்காக உருவாக்க நேரத்தை செலவு செய்வதில்லை.. எனினும் சில இணையப் பக்கங்களில் ஆன்லைனில் தின/வார காலண்டராக கொடுக்கிறார்கள். சில சோதிட தளங்களில் பஞ்சாங்கமாக தமிழ் காலண்டர் மென்பொருளை பணம் செலுத்தி பெற முடியும்.
தற்போது IPad / மற்றும் கைபேசிகளில் இப்படியான apps கள் தாராளமாக இலவசமாக கிடைக்கின்றன. அவற்றை சுலபமாக கணினி அறிவு குறைந்தவர்களும் Mobile apps ஆக தயாரிக்க முடியும் என்பதால், உருவாக்கி apps store இல் இலவசமாக கொடுக்கிறார்கள். இப்படியான அப்ப்ஸ் களை சுலபமாக யாரும் கைபேசிக்காக உருவாக்கிக் கொள்ள முடியும்.கணினி அறிவு அதிகம் தேவையில்லை.
வேண்டுமானால் கைபேசியில் மொபைல் அப்ஸ் ஆக தமிழ் காலண்டரை பாவிக்கலாம்.இல்லையேல் கணினியில் இப்படியான மொபைல் அப்ப்ஸ் ஐ பாவிக்கவும் முடியும்.