தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
எப்படி அதை உபயோகிப்பது செ இன் தமிழ்
by ஆர்வலர் (400 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
ஒரு வன்பொருளில்-device- தவறு ஏற்படும் போது,அதை சரி செய்ய உருவாக்கப்படும் வசதியை மீட்பு-காப்பாற்றும் வட்டு-Rescue Disk- எனலாம். கணினியைப் பொறுத்த அளவில் இந்த  Rescue Disk ஐ கணினியில் உள்ள சிஸ்டம் கோப்புகளில் இருந்து உருவாக்கி அதே கணினி வந்தட்டில்/CD-DVD-USB இல் சேமித்துக் கொள்ளலாம்.

கணினியில் ஏற்படும் பெரிய தவறுகளை-errors- அல்லது Boot பிரச்சனையில் இந்த டிஸ்க் மூலம்  கணினியை மீண்டும் புதிதாக இயங்குதளத்தை நிறுவாமல் சரி செய்து கொள்ளலாம்.

இப்படி செய்யும் போது தனிப்பட்ட கோப்புகளை இழக்காமல் சரி செய்ய முடிகிறது. விண்டோஸ் மற்றும் லீனக்ஸ் கணினிகளில் இந்த Rescue Disk முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் எல்லாத் தவறுகளையும் சரி செய்ய முடியும்  எனச் சொல்லிவிட முடியாது.

சில மடி-மேசைக் கணினிகளில் தனியாக ஒரு வந்தட்டுப் பிரிவை உருவாக்கி அதில் இந்த
Rescue Disk ஐ பதிவு செய்திருப்பார்கள்.(Dell -D : )
 
கணினியில் உள்ள முறையைக் கொண்டே விண்டோஸ் கணினிகளில் Windows rescue/system Repair Disc / system rescue disk/startup disk  என சில முறைகளில் ISO -bootable disk  ஆக உருவாக்க முடியும்.

இது தவிர system rescue disc  உருவாக்க சில தனிப்பட்ட மென்பொருள்களும் இலவசமாகக் கிடைக்கின்றன.

இதுதவிர சில அன்டிவைரஸ் நிறுவனங்கள் வைரஸ்களால் பாதிக்கப்பட்ட கணினிகளை காப்பாற்றி மீட்டெடுக்க AVG/Panda/Comodo/Kaspersky Rescue Disk  போன்ற Rescue Disk களை உருவாக்கி உள்ளார்கள்.

இப்படி உருவாக்கப்பட்ட வட்டுகள் bootable ஆக இருப்பதால் அதை DVD/USB மூலம் கணினியை மீள்தொடக்கி  தானியங்கியாக தவறுகளை சரி செய்து கணினியைக் காப்பாற்ற முடியும்.

அதனால் எங்கே  சேமிக்கிறோமோ அதை Hard Disk./DVD/USB முதல் பூட்டாக BIOS இல் (F2/F10/F5? அழுத்துவதன் மூலம்- கணினிக்குக் கணினி மாறுபடும்) First Boot ஆக கணினி தொடக்கும் போது மாற்றிக் கொள்ள வேண்டும்.
 
எனக்குத் தெரிந்தது இவ்வளவே!
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
asked Jan 29, 2016 by ஆர்வலர் (640 points)
0 votes
1 answer
0 votes
1 answer
asked Sep 23, 2012 by இளையோர் (220 points)
0 votes
2 answers
asked Nov 19, 2015 in Windows by புதியவர் (120 points)
...