1,731 total views
திறன்மிகு கைபேசிகள் (Smart phone) வந்த பின்னர் பலரும் தனியாக டிஜிடல் கேமரா வாங்குவது இல்லை. ஏற்கனவே சோர்ந்து போய் இருக்கும் கேமரா நிறுவனங்களை சொரிந்துவிடும் அறிவிப்பு ஒன்றை சோனி நிறுவனம் செய்துள்ளது.
NFC மற்றும் Wi-Fi தொழில்நுட்பத்தில் 20.2 மெகா பிக்ஸல் திரனுள்ள கேமரா லென்ஸ் பொருத்திய புதிய கைபேசிகளை அறிமுகம் செய்ய இருக்கிறது சோனி.
நோக்கியாவின் லுமியா 1020 கைபேசி அதிகத் தெளிவுடன் வந்துள்ளது. பிலிம் ரோல் வித்து வந்த கோதாக் நிறுவனம் மூடு விழா கண்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.
அதாலால், பல கேமரா தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கைப்பேசியில் தங்களின் பொருள்களை எவ்வாறு புகுத்துவது என ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
போனுக்கு கொண்டை வைத்தது போல் இருக்கும் இந்த கேமரா லென்ஸ் மக்களுக்குப் பிடிக்குமா என்பது சந்தைக்கு வந்த பின்னர் தான் தெரியும்.
Comments are closed.