மொபைல் போனை ஆத்திரத்தில் எறியும் காதலர்களுக்காக
2,790 total views
மொபைல் போனை ஏதோ கையெறி குண்டு போல சில நேரங்களில் நாம் பயன்படுத்துவதுண்டு. SJ Suriyaa அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல நேரங்களில் நமது மொபைல் தவறி விழுந்து சில்லு சில்லா சிதறிப் போகும்.
எப்படி மகிழுந்துகளில் (Cars) ஒரு பலூன் வைத்து விபத்து நடக்கும் போது டக்குனு வர வைச்சு பயணிகளை காப்பாத வழி இருக்கோ.. அதே மாதிரி மொபைல், டிஜிடல் காமெரா, Tablets போன்றவற்றை Air bag மூலம் அவசரத்தில் பாத்துக்காகும் வழி ஒன்றை Amazon நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் முதல் படியாக இந்த யோசனைக்கு காப்புரிமை பெற்றுள்ளது.
புதிய Kindle உபகரணத்தில் இந்த Air Bag வசதி 2013இல் செய்யப்படலாம் என தெரிகிறது. மக்கள் விரும்பும்பட்சத்தில் அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் புதிய உறை போன்ற ஒன்றை Amazon விரைவில் விற்க இருக்கிறது.
நீங்கள் எப்படி? இந்த புது Airbag மொபைல் கவரை வாங்குவீர்களா? இல்ல கழுத்துல தாலி (Mobile Tag) போட்டு மொபிலுக்கு வேலி போடுவீங்களா?
Comments are closed.