913 total views, 1 views today
லாவா நிறுவனம் ரூ.5,949 விலையுடைய புதிய லாவா ஏ97 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்து மொபைல் கடைகள் மற்றும் இணையதளத்திலும் கிடைக்கும். 12 பிராந்திய மொழிகள் கைப்பேசியின் சிறப்பம்சமாக இதில் உள்ளடக்கிய வருகிறது. கோல்ட், ப்ளூ, கிரே வண்ண வகைகளி்ல் கிடைக்கும் லாவா ஏ97 என்ற ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குதளத்தை கொண்டு இயங்கவல்லது. 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 FWVGA இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோSD கொண்டு 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. காமிராவை பொறுத்தவரையில் 5 மெகாபிக்சல் பின்புற கேமராவும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவும் கொண்டுள்ளது. 2350mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதர அம்சங்களான , Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, FM ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 145.00×72.00×9.20mm பரிமாணம் மற்றும் 160 கிராம் எடை கொண்டது.
Comments are closed.