சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

815

 2,198 total views

சாம்சங்  நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சாதனம் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் எனவும், அதன்பின்பு  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்..

ஆண்ட்ராய்டு 9.0 (Pie) இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.

6.7 இன்ச்ஞ் குவாட் ஹெச்.டி திரை கொண்ட வளைவான டைனமிக் டிஸ்ப்ளே போன் இது.

நான்கு பேக் சைட் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. 12எம்.பி+12 எம்.பி+16 எம்.பி ட்ரிப்பிள் லென்ஸ் ப்ரைமரி கேமரா, 10 எம்.பி ப்ரண்ட் கேமராவும் உள்ளது.

8 ஜிபி ராம் என்பதால் செயல்திறன் வேகமாக இருக்கும்.

4500எம்.ஏ.ஹெச் லி-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது அதனை ரிமூவ் செய்ய முடியாது. 256 ஜிபி/512 ஜிபி என இரண்டு இண்டர்னல் ஸ்டோரேஜ்கள் இதில் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் மெஜஸ்டிக் ப்ளாக், ராயல் கோல்ட் மற்றும் க்ரவுன் சில்வர் நிறங்களில் இவை வெளியாகின்றன.

1440*3040 பிக்சல்ஸ் கொண்ட ஸ்க்ரீன் ரெசல்யூஷன் உள்ளது. சாம்சங் எக்ஸினோஸ் 9 ஆக்டா 9820 என்கிற சிப்செட் இதில் 5ஜி தொழிநுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குவால்கோம் எஸ்டிஎம் 855 ஸ்னாப் ட்ராகன் 855, ஆக்டோ கோ ப்ராசர் இதில் இருக்கிறது.

Fingerprint Sensor, Accelerometer, Barometer, Gyro Sensor, Geomagnetic, Hall Sensor, Proximity, RGB Light Sensor, Heart Rate Sensor ஆகிய சென்சார்கள் இதில் உள்ளன.

பேஸ் அன்லாக், என்எப்சி, வாட்டர் ப்ரூஃப், டஸ்ட் ஃப்ரூப், வயர்லெஸ் சார்ஜிங், ஐஆர்ஐஎஸ் சென்சார், குவிக் சார்ஜிங் மற்றும் சாம்சங் பே ஆகிய வசதிகளும் இதில் உள்ளனவாம். இந்த போனில் வெறும் ஒரு நொடிக்குள் முழு திரைப்படத்தை டவுன்லோடு செய்யப்படும் என்பதுடன் அதிக நெட்வொர்க் வசதியாக நேரத்தை சேமிக்கலாம்.

You might also like

Comments are closed.