மிகவும் சுலபம். முதலில் உங்கள் XP யை ஏதாவது ஒரு burn சாப்ட்வேர் மூலம் ISO file ஆக மாற்றுங்கள். அந்த ISO file ஐ USB ல் சேமிக்க வேண்டும்.அதற்கு முன் USB டிரைவ் ஐ NTFS முறைப்படி போர்மட் செய்து கொள்ளுங்கள்.அதன் பின் ISO file ஐ USB ல் சேமித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கணினியில் USB ஐ இணைத்துக் கொண்ட பின் boot செய்ய வேண்டும்.முக்கியமாக கவனிக்க வேண்டியது, BIOS settings ல் USB ஐ boot disk காக முதன்மையாக தெரிவு செய்து கொள்வதாகும்.இல்லையேல் boot தாமதமாகலாம் அல்லது error வரலாம்.
USB இணைப்பில் பிரிண்டர் போன்ற வேறு எந்த இணைப்பையும் வைத்திருக்கக் கூடாது.முடிந்த வரை முதல் இணைப்பில் ISO USB யை சொருகுங்கள்.