1,564 total views
Dell Latitude E6220 ஒரு சிறிய மற்றும் உறுதியான Laptop என்று கூறலாம். இதன் செயல் திறன் அட்டகாசமாக இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் 1366 x 768 pixel resolution கொண்ட 12.5 inch display கொண்டிருக்கிறது. அதுபோல் 128 GB SSD hard drive உள்ளடக்கியுள்ளது.
இதன் processor எடுத்துக் கொண்டால் அது 2.6 GHz Intel Core i5-2540M கொண்டிருக்கும். இதனை upgrade செய்துகொள்ளலாம். இதன் Memory 4GB, 1,333MHz DDR3 ஆகும். அது போல் graphics வேலைகளுக்காக Integrated எச்டி 3000 graphics processing unit கொண்டுள்ளது. மேலும் 1080p video playback-ம் உள்ளது.
இந்த டெல் லேப்டாப்பின் பேட்டரி 7.30 மண நேரி இயங்கு நேரத்தை அளிக்கிறது. இந்த லேப்டாப்பின் மொத்த எடை 1.7 கிலோவாகும். அதுபோல இது விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குகிறது.
இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இஎஸ்எடிஎ/யுஎஸ்பி கோம்போ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், எச்டிஎம்ஐ போர்ட், ஜிகாபிட் எர்த்நெட் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளை இது தாங்கி வருகிறது. மேலும் எக்ஸ்பிரஸ் கார்டு ஸ்லாட், வெப்காம் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்றவை இந்த லேப்டாப்பை மெருகு ஏற்றுகின்றன. இதன் கீபோர்டு மிக அட்டகாசமாக இருக்கிறது.
மேலும் இந்த லேப்டாப்பில் அதிக உயர் திறன் கொண்ட பேட்டரியை தேவைப்பட்டால் பொருத்திக் கொள்ளலாம். இந்த டெல் லேப்டாப்பின் விலை ரூ.75,000 முதல் ஆரம்பமாகிறது.
Comments are closed.