1,269 total views
அமெரிக்காவின் புளோரிடா நகரில் ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் தங்களுடைய ஜீப்பில் ‘சாம்சங் கேலக்சி நோட் 7’ ரக செல்போனை எடுத்துச் சென்றனர். அவர்கள் அந்த செல்போனை ஜீப்பில் இருந்தவாறே ‘சார்ஜ்’ செய்தபோது திடீரென்று அது வெடித்து அந்த ஜீப் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இது போன்ற தொடர் சம்பவங்கள் நடந்தமையால் இந்தியாவை தொடர்ந்து, சிங்கப்பூரிலும் விமானத்தில் சாம்சங் கேலக்சி நோட் கைபேசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்சி நோட் 7 கைபேசியை விமானத்துக்குள் சார்ஜ் செய்வதும், ஆன் செய்வதினாலும் தீப்பிடிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக கூறியதை அடுத்து அந்த சாதனத்தினை விமான நிலையங்களில் உபயோகிப்பது தடை செய்யப்படுவதாக சிங்கப்பூர் ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்ற தடையை ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் மற்றும் விர்ஜின் நிறுவனங்களும் அபுதாபியைச் சேர்ந்த எத்தியாட் விமான நிறுவனமும் விதித்துள்ளன.மேலும் இதுபோன்ற நடவடிக்கை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான பயணம் கருதி எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இதற்கு முன் சாம்சங் கேலக்சி நோட் 7 மொபைல் சாதனத்தினை வாங்கியவர்களை திருப்பி தரும்படியும் இனி சாம்சங் கேலக்சி நோட் 7 வாங்க விரும்புபவர்கள் அந்த போனிற்கு பதிலாக சாம்சங்கின் வேறு மொபைலையும் வாங்க பரிந்துரை செய்து வருகின்றனர். பேட்டரி குறித்து ஏற்பட்ட பிரச்சனையால் அதனை சரி செய்த பிறகே இந்தியாவில் இந்த சாதனம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.