1,274 total views
இந்தியாவில் மென்பொருள் தயாரிப்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் Wipro நிறுவனம் Ego Aero Ultra என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மிகவும் மெல்லிய லேப்டாப்.
இந்த புதிய Ego Aero வரிசையில் வரும் இந்த லேப்டாப்புகள் எல்லா தேவைகளையும் நிறைவு செய்யும். இது ஒரு திறமை வாய்ந்த மற்றும் எடை குறைந்த நோட்புக் ஆகும். அன்றாட வேலைகளைச் செய்வதில் இந்த லேப்டாப் சிறந்தது என்று கூறலாம்.
இந்த லேப்டாப் 2ஜி Intel Core i5 ஐ5 Processor மற்றும் ஒரு 11.6 inch LED HD display உள்ளது. இந்த லேப்டாப் மக்னீசியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் டிசைனும் பக்காவாக உள்ளது. இதன் தடிமன் 19.3 மிமீ ஆகும். இதன் எடை 1.7 கிலோ மட்டுமே. மேலும் இந்த லேப்டாப் 4GB memory மற்றும் 500GB Hard disk கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் Windows 7 OS கொண்டிருக்கிறது. அதுபோல் கீபோர்டு மற்றும் multi touch பேடையும் கொண்டிருக்கிறது.
இந்த புதிய லேப்டாப் இன்டல் மற்றும் விப்ரோ போன்றவற்றின் கூட்டு முயற்சியினால் உருவானதாகும். இவற்றின் விலை ரூ.45,000லிருந்து ஆரம்பமாகிறது.
விப்ரோவின் விபி மற்றும் வர்த்தகப் பிரிவின் தலைவாரான திரு. அசோக் திருப்பதி கூறும் போது இந்த புதிய லேப்டாப் வளரும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.
Comments are closed.