ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உபயோகமுள்ள வசதி

628

 1,565 total views

வளரும் கலியுகத்தில் அனைத்தும் எளியனவாக மாறி வருகிறது . அந்த வகையில் Gmail இப்பொழுது இன்னும் ஒரு புது வசதியை கொடுத்துள்ளது. இதற்கு முன் நீங்கள் ஒரு புகைப்படத்தை உங்கள் மின்னஞ்சலில் இணைக்க அதை பதிவேற்றம் ( upload ) செய்ய வேண்டி இருக்கும். இப்பொழுது நீங்கள் பின் வரும் வழிமுறைகள் மூலம் எளிதாக புகைப்படத்தினை உட்புகுத்தலாம்.

குறிப்பு : இது தற்பொழுது google chrome ப்ரௌசரில் மட்டுமே சாத்தியமாகும்.
நாம் எதவாது ஒரு பகுதியை ( எழுத்துக்கள் , புகைப்படம் ) தெரிவு (select ) செய்து அதை CTRL + C பட்டனை அழுத்துவான் மூலம் copy எடுக்கிறோம் இதை நாம் கணினியில் மற்றும் ஒரு இடத்தில் CTRL + V தட்டச்சு செய்வதன் மூலம் உட்புகுத்துவோம் .இப்பொழுது இதே முறை கொண்டு ஒரு புகைப்படத்தின் மீது உங்கள் mouse ன் மூலம் வலது புற பட்டனை அழுத்தும் பொழுது copy image என்ற option உங்களுக்கு கிடைக்கும் இதைக் கொண்டு நீங்கள் gmail ல் இப்பொழுது பேஸ்ட் செய்தால் அந்த புகைப்படத்தை எளிதாக உட்புகுத்திவிடலாம்.
இந்த விவரத்தை மேலோட்டமாக படித்தால் உங்களுக்கு இது தேவை இல்லாத ஒன்றாக தோன்றும். அல்லது இந்த வசதி முன்பே இருப்பது போன்று தோன்றும். ஆனால் உண்மையில் இந்த புதிய வசதியின் சரியான நோக்கத்தை காண்போம்.
நீங்கள் கணினியிலோ அல்லது இணையத்திலோ ஒரு புகைப்படத்தை copy செய்து paste செய்யும் பொழுது தற்காலிகமாக அது உங்கள் திரையில் தெரியும் . ஆனால் உங்கள் நண்பருக்கு அந்த மின்னஞ்சலை அனுப்பினால் அவர்களுக்கு அது தெரியாது. ஒரு வேலை நீங்கள் copy  செய்தது இணையத்தின் வாயிலாக என்றால் . அந்த புகைப்படம் இணையத்தில் உள்ள வரை தெரியும். ஒரு வேலை அது அழிந்தால் மின்னஞ்சலில் உள்ள புகைப்படமும் காணாமல் பொய் விடும் .
இதை தடுக்கும் பொருட்டு இப்பொழுது gmail  ஆனது நீங்கள் paste செய்யும் புகைப்படத்தை தனது செர்வரில் பதிவு செய்துகொள்ளும். இது தான் இதன் பின் உள்ள தொழில்நுட்பமாகும்.
Note : this technique only works on google chrome browser
Courtesy : Gmail Blog

You might also like

Comments are closed.