இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் ? அப்படியானால் உடனடியாக புதிய பதிப்பை அப்டேட் செய்ய தொடங்குங்கள்..!
1,505 total views
நீங்கள் இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 ஐ உபயோப்படுத்துபவரா ? ஆம், என்றால் இனிமேல் அதை மறந்துவிடும் நிலையும் ஏற்படும். ஏனெனில் இந்த மைக்ரோசாப்ட் அனைத்து இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 ஆகிய வெப் பிரவுசர்களுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவினை நிறுத்த திட்டமிட்டுள்ளது. . ஏனெனில் மைக்ரோசாப்ட் ஜனவரி 12 முதல் வெப் பிரவுசரின் புதிய பதிப்பான 11 ஐ தவிர மற்ற அனைத்து உலவிகளுக்கும் அளித்துவந்த ஆதரவை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அப்படியானால் ஜனவரி 12 ற்கு பிறகு மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்ஸ்புளோர் பதிப்புகளுக்கு அளித்து வந்த அனைத்து அப்டேட்களையும் நிறுத்திவிடும். ஆகையால் இனிமேல் நீங்கள் இண்டர்நெட் எக்ஸ்புளோரில் பழைய பதிப்பை உபயோகப்படுத்தினால் உங்கள் கணினி இணைய பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு ஆளாக நேரிடும். மேலும் மைக்ரோசாப்டின் 8,9,10 போன்ற எந்த பதிப்பிற்கான சமீபத்திய அப்டேட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றை பெறவியலாது.
இனிமேல் சமீபத்திய பதிப்பான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 11-க்கு மட்டுமே தொழில்நுட்பம் சம்பந்தமான உதவிகள், திருத்தங்கள், தொழில்நுட்ப அப்டேட்கள் பெற முடியும். மேலும் இதுவரை இல்லாத இணையம் தொடர்பான பாதுகாப்பை வழங்கும் விதமாக இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 இருக்கும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை மைக்ரோசாப்ட் இதற்கு முன்னரே வெளி்யிட்டிருந்தாலும் இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட 340 மில்லியன் பயனர்களை பாதிக்க உள்ளது. ஏனெனில் கணக்கிடப்பட்ட வலைதள மதிப்பீட்டின்படி டிசம்பர் மாதம் வரை மட்டுமே கிட்டத்தட்ட 340 மில்லியன் பயனர்கள் இண்டர்நெட் எக்ஸ்புளோரின் பழைய பதிப்பை பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதில் 42.5% பயனர்கள் உலவியின் பழைய பதிப்பினை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் நீங்கள் இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 போன்ற பதிப்புகளில் இயங்கி கொண்டிருந்தால் ஜனவரி 12 க்குள் அனைவரும் மைக்ரோசாப்ட்ன் புதிய இணைய உலவியின் புதிய பதிப்பான 11 மாற தயாராகுங்கள்..!
Comments are closed.