உங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா?
1,335 total views
மைக்ரோசாப்ட் தற்போது இணையத்தின் வேகத்தை சரிபார்க்க உதவும் கருவியை சோதித்து வருகிறது. இதனை Bing -இல் வெளியிட தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உங்களது இணையத்தின் தற்போதைய வேகத்தினை பெறலாம்.மைக்ரோசாப்ட் முதலில் இதனை விண்டோவ்ஸ் திரையில் குறிவைத்திருந்தது. ஆனால் தற்போது Bing-இல் சோதனையை மேற்கொண்டு வருகிறது.
Bing-இல் சென்று “Internet speed test” என்று டைப் செய்து தேடு பொறியை தட்டினால் கீழே காட்டப்பட்டுள்ளவாறு பக்கங்களைக் காணலாம்.
மேலும் “speed test” என்று டைப் செய்கையில் கீழே கொடுக்கபட்டுள்ளவாறு இணைய பக்கங்களை பெறலாம்.
இதனால் சொதனைக்கென தனியே ஒரு மென்பொருளையோ அல்லது சாதனத்தையோ நோக்காமல் தேடுபொறிகளிலேயே பெறலாம். இந்த சோதனையின் மூலம் நீங்கள் உங்கள் இணையத்தின் IP address, லேட்டன்சி , பதிவிறக்க வேகம் , மற்றும் பதிவேற்ற வேகம் போன்றவற்றையும் பெறலாம்.
Comments are closed.