தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
ஹொவ் டு இன்ஸ்டால் தி விண்டோஸ்  os
in Windows by simbukettevan புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
முதலில் பழைய கணினியாக இருந்தால் இயங்குதளம் நிறுவ வந்தட்டில் போதுமான இடம்,Ram இன் அளவு போன்ற windows 7 ற்கான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக கணினி இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.

Windows மட்டுமல்ல,எந்த இயங்குதளம்-OS- என்றாலும் கணினியில் பதிக்க-install- இரண்டு முறைகள் உண்டு.

ஒன்று clean install – ஏற்கனவே கணினியில் எந்த இயங்குதளமும் இல்லாத போதும்-புதிய கணினிகளில்-,அல்லது முற்றாக வந்தட்டை சுத்தம் செய்து-format- பதிவது.இதன்படி போர்மட் செய்யும் போது ஏற்கனவே உள்ள அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டு புதிதாக இயங்குதளம் நிறுவப்படும்.

Clean install செய்யும் முன்னர்- வேண்டிய தேவையான கோப்புகளை சேமித்துக் -backup- கொள்ளவும்.

இயங்குதளத்தை நிறுவ USB/CD/DVD இதில் ஏதாவது ஒன்றில் இயங்குதளம்- Windows 7 installation disc -boot செய்யக்கூடிய வகையில் -ISO போன்ற- இருக்க வேண்டும்.( CD /DVD  இல்லையேல் இணையத்தில் இருந்து DVD /USB  ISO  ஆக  பதிவிறக்கிக் கொள்ளலாம்) இல்லையேல் Windows 7 installation disc ஐ  வந்தட்டின் வேறொரு பகுதியில் -Partition- இயங்குதளம் சேமித்து  அங்கிருந்து boot செய்து வந்தட்டில் நிறுவமுடியும்.

Boot செய்ய கணினி தொடக்கும் போது எந்த இடத்தில் இருந்து boot செய்ய வேண்டுமோ அதை USB/CD/DVD/Partirion- முதல் boot ஆக BIOS இல் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.தெரிவு செய்ய கணினி தொடங்கும் போது DEL/F9/F10 ஏதாவது ஒன்றை -கணினிக்கு கணினி இது மாறுபடும்- அழுத்துவதன் மூலம் தெரிவு செய்து boot செய்யலாம்.(ஆனாலும் சில புதிய கணினிகளில் தானாகவே கணினி தேடிக் கொள்ளும்.)

கணினியின் வேறொரு பிரிவில்-partition  D /E ....-, இணையத்தில் இருந்து தரவிறக்கி, இயங்குதளம் சேமிக்கப்பட்டு இருந்தால், அந்த இடத்தில் setup.exe என்பதை double click செய்து தொடக்கலாம்.

ஏற்கனவே கணினியில் வேறொரு இயங்குதளம் இருந்தால்,புதிதாக நிறுவ இருக்கும் இயங்குதளம் எந்த பிரிவில் -partition- நிறுவ வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.

Windows 7 installation disc -USB/CD/DVD/Partirion இல் பதிவு செய்யப்பட்ட இயங்குதளம்-உரிய இடத்தில் கொடுத்து கணினியை மீள்தொடக்க- தானாகவே நிறுவ ஆரம்பிக்கும் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கலாம். உதாரணமாக பெயர்,இணைய இணைப்பு,மொழி,பாவிக்கும் இடம்,Accept the License Terms .........போன்றவை.

இதுதவிர சிரமப்பட எதுவும் இல்லை.OS  நிறுவ  எந்த முன் அறிவும் தேவையில்லை.

முடிந்தவரை 10-15 நிமிடங்களில்-fast install- செய்யாமல் இருப்பது நல்லது.
by sakthy வல்லுநர் (9.7k points)

Related questions

+1 vote
1 answer
asked Feb 15, 2012 in Windows by pradhap புதியவர் (130 points)
+1 vote
1 answer
asked Sep 15, 2015 in Windows by yogaraj ஆர்வலர் (400 points)
0 votes
1 answer
asked Jan 26, 2013 in Windows by arulbenjamin இளையோர் (280 points)
0 votes
0 answers
asked Jan 18, 2013 in Windows by arulbenjamin இளையோர் (280 points)
0 votes
1 answer
asked Sep 22, 2011 in Windows by anonymous
...