705 total views
லேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரித்து வழங்கி வரும் சீன நாட்டைச் சேர்ந்த சியோமி நிறுவனமானது தற்போது டிரோன்கள் என்று கூறப்படுகின்ற ஆளில்லா விமானங்களை மே 25இல் அறிமுகபடுத்த உள்ளது. இந்நிறுவனம் இதற்குமுன் ஸ்மார்ட் வாட்ச், ரைஸ் குக்கர் , செல்ப் பேலன்சிங் ஸ்கூட்டர் போன்றவற்றை தயாரித்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே இதுகுறித்த தகவல்களை சியோமி மறைமுகமாக வெளியிட்டுள்ளது. கூடவே மை மேக்ஸ் ஸ்மார்ட் போனினையும் இம்மாதம் வெளியிடயிருப்பதால் இந்த இம்மாதம் சியோனிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இதுவரை சியோமி நிறுவனம் மொபைல் போன்களை மலிவான விலையில் தயாரித்து வழங்கி வந்ததைப் போன்றே டிரோன் சேவையிலும் தொடரும் எனவும் கூறப்படுகிறது.
Comments are closed.