1,043 total views
இதுவரை ரோபோக்கள் ஒரு வேலைக்காரனைப் போல மனிதர்களுக்கு உதவியாக அறிவியல், மருத்துவம் , மற்றும் பல துறைகளில் செயலாற்றி வந்ததைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த ரோபோ சற்றே புதுவிதமாக ஆர்டர் செய்யும் பீட்சாக்களை அவர்களது இருப்பிடத்திற்கே பயணித்து டெலிவரி செய்கிறது. இது போன்ற நுட்பத்தை இதற்குமுன்னே டொமினோஸ் பீட்சா நிறுவனம் கையாண்டிருந்தாலும் இதோ இன்னொரு வகை பீட்சாக்களை டெலிவரி செய்யும் ரோபோக்கள் சாலைகளில் உலவ விட தயாராக்கி வருகின்றனர் ஸ்டார்சிப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தினர். டெலிவரி செய்த சில நேரங்களுக்குள் இந்த ரோபோட் சரியான முகவரிக்கு பீட்சாக்களை கொண்டு வந்து தருகிறது. இதன் உடல் முழுவதும் காமிராக்களும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. ரோபோக்கள் மிகவும் தடிமனான உலோக சுவர்களால் மூடப்பட்டுள்ளன. ரோபோவானது குறித்த வாடிக்கையாளரை சென்றடைந்த பின்னர் ஸ்டார்சிப் டெக்னாலஜிஸ் நிறுவனர் ரோபோவின் மேல் பகுதியை அமர்ந்த இடத்திலிருந்தே திறக்க ஏற்பாடுகள் செய்ததும், வாடிக்கையாளர் எளிதாக பீட்சாவினைப் பெறலாம். வாடிக்கையாளரை சென்றடையும் இந்த பயணத்தில் சாலையில் வரும் தடைகளையும் இடையூறுகளையும் கண்டு ரோபோக்களை வழிநடத்த பொறியாளர்கள் மற்றும் திட்ட மேலாளர் ஆகியோர் பின்னிருந்து செயல்படுவர். இவ்வாறாக சராசரியாக 4 ரோபோக்களுக்கு ஒரு பொறியாளர் என நியமித்து, கண்காணித்து வருகின்றனர். மேலும் 100 ரோபோக்களுக்கு ஒரு பொறியியலாளரை பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இவற்றை தலின் மற்று ஈஸ்டோனியா ஆகிய நகரங்களில் சோதனையிட்டு வருகின்றனர். இதன் மூலம் ஒரு மனித சக்தியை வைத்து 100 மனிதர்களின் வேலையை ஈட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது இதே போன்றே அமேசான் போன்ற நிறுவனமும் ஆளில்லா விமானங்கள் மூலம் பொருள்களை டெலிவரி செய்யும் திட்டங்களில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோக்கள் 2017லிருந்து சாலைகளில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.