Vodafone Smart Tab 10

446

 1,009 total views

கடந்த வருடம் Vodafone அறிமுகப்படுத்திய Tablet இப்போது Smart Tab10 என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த Tablet Android 3.2 Honeycomb இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த Tablet விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.  இதன் முக்கிய சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இதன் தொடுதிரை display 16 நிறங்களை உள்ளடிக்கியிருக்கிறது. 10.0 inch display அளவில் 800 x 1280 pixels  கொண்டுள்ளது. Camera வசதியைப் பார்க்கும் போது பின்புறம் 5 மெகா பிக்சல் கேமராவையும் அதே நேரத்தில் 2 மெகா பிக்சல் முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது.

இதன் Memory 16 GB ஆகும். Micro SD card மூலம் 32GB வரை விரிவுபடுத்த முடியும். தகல்களை எளிதாக பரிமாறிக்கொள்ள ஏதுவாக ப்ளூடூத் வி2.1, USB 2.0 ஆர்ஜே 45, WiFi, ஹெட்போன் அவுட் மைக்ரோபோன் இன், ஜிகாபிட் லேன் போன்ற எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் இதில் HDMI port இல்லை.

Lithium Ion Battery கொண்டுள்ளது.  5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த Tablet தடிமன் 11.4 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 391 கிராம் மட்டுமே. இதன் CPU Dual core  1.2 ஜிஎச்ஸட் ஸ்கார்பியோன் கொண்டுள்ளது. க்வல்காம் டூவல் கோர் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் வேகம் மிக அபாரமாக இருக்கும். போதுமான மல்டிமீடியா அப்ளிகேசன்களும் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் பிப்ரவரி மாதத்திற்குள் வந்துவிடும் என்று தெரிகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

You might also like

Comments are closed.