மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்) அறிமுகம்.

630

 1,157 total views

சத்யா நாதெல்ல  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன்   “Mobile First, Cloud First” எனும் சித்தாந்தத்துடன் நிறுவனத்தின் இனி அனைத்து செயல்பாடுகளும் அமையும் என அறிவித்திருந்தார்.
அதன் முதல் படியாக.,  MS Office மென்பொருள் ஆப்பில் ஐபேடு   கையடக்க கணினியில் செயல்படும் வகையில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டே நாட்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட மென்பொருள் பட்டியலில் iTunesல் முதலிடம் பிடித்தது.
இன்று.,  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பில் ஐபேடு போட்டியான  சர்பேஸ் (Surface Tablet) கையடக்க கணினியின் புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது.

Microsoft Surface Pro 3

 

Launch Event in NYC
Dock Stand & Type cover
Full 12 inch View
Can stand in different positions
Easy to attach and remove keyboard
Has a USB 3.0 Port
Photoshop Touch UI
Photo Shop Touch UI
இதன் அறிமுக விழாவில்., 96% ஐபேடு உரிமையாளர்கள்., தங்களுடன் ஒரு மடிக் கணினியையும் வைத்துள்ளார்கள்.  ஐபேடு என்றுமே ஒரு மடிக்கணினிக்கு மாற்றான பொருளாக இருந்ததில்லை.
ஆகவே., இந்த புதிய Surface Pro 3 யை ஒரு முழுமையான மடிகணினி மாற்றாக நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.
12 அங்குலம் திரையுடன், 2160 x 1440 திரை தெளிவுதிரனுடன்  இது  Core i3, Core i5 மற்றும்  Core i7 ஆகிய மூன்று வித செயலிகளுடன் (Processor) மூன்று விலையில் கிடைக்கும்.
அறிமுக விழாவில்., தொடுதிரைக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள Adobe PhoneShop மென்பொருள் இயக்கிக் காட்டப்பட்டது.
வெறும் 800 கிராம் எடையுள்ள Surface Pro 3 – Apple Mac Air மடிக்கணினியை விட எடை குறைவு எனக் காட்ட அண்ணாச்சி கடை தராசு ஒன்றின் மேல் இரண்டு கணினிகளையும் வைத்து நிருத்து காமித்தார்கள்.
Core i3 வகையின் ஆரம்ப விலை $799 இல் இருந்து ஆரம்பிக்கிறது.

Pricing

Surface Pro 3Estimated retail price (USD)
Intel® Core™ i3, 64 GB[1] and 4 GB of RAM$799 (Rs. 48800)
Intel® Core™ i5, 128 GB7 and 4 GB of RAM$999
Intel® Core™ i5, 256 GB7 and 8 GB of RAM$1,299
Intel® Core™ i7, 256 GB7 and 8 GB of RAM$1,549
Intel® Core™ i7, 512 GB7 and 8 GB of RAM$1,949
Surface Pro 3 Accessories Estimated retail price (USD)
Surface Pro Type Cover$129.99 (Rs. 7600)
Additional Surface Pen$49.99
Additional 36W Power Supply$79.99
Additional Pen Loop$4.99
Docking Station for Surface Pro 3$199.99
Surface Ethernet Adapter$39.99

 

இந்தியாவில் இவை இன்னமும் வெளி வரவில்லை., என் நண்பரின் மாமனார் மாமியார் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று இந்த வாரம் வருகிறார்கள். அவர்களிடம் ஒன்றை வாங்கி வரச் சொல்லலாம் என்றிருந்தேன்., கடேசியில் அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது.
விரைவில் surface என் கைகளில் தவழும் என எதிர்பார்கிறேன்.
– கார்த்திக்.

You might also like

Comments are closed.