இந்தியாவில் கைபேசி விற்பனை​ 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி!

47

இந்தியாவின் கைபேசி சந்தை வருடா வருடம் பெரிதாகவே வளர்ந்து வந்துள்ளது. கைபேசி விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்தே இருந்துள்ளது. அனால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த காலாண்டு (ஜனவரி – மார்ச் 2015)  மட்டும் 14.5% சதவீதம் குறைந்து 5 கோடியே 30 லட்சம் கைபேசிகள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த காலாண்டில் (ஜனவரி – மார்ச் 2015) விற்பனை ஆறு கோடியே இருபது லட்சமாக இருந்தது.

இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆவது நடுத்தர ரக கைபேசிகள் இவற்றின் விற்பனையும் 18 சதம் குறைந்துள்ளது. இது இந்திய சந்தையின் மிகப் பெரிய இரண்டு கைபேசி விற்பனை நிறுவனங்களான MicroMax & Samsung நிறுவனங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வருடா வருடம் ஆப்பிள் கைபேசி விற்பனை ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குறைந்துவிடாமல் இருக்க, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் கைபேசிகள் குறிப்பிட்ட வருடங்கள் கழித்து தானே செயலிழந்து போகும் வகையில் ஆப்பிள் நிறுவனமே தயாரித்து வழங்குவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது போல் ஏதாவது செய்து நடுத்தர ரக கைபேசிகள் பயனற்று போகும் வகையில் சூது ஏதாவது செய்தால் தான் தங்களின் வருடாந்தர விற்பனை இலக்கை கைபேசி நிறுவங்கள் இந்தியாவில் எட்ட முடியும்.

You might also like

Comments are closed.