MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது!
1,263 total views
கடந்த வருடம் ஆபீஸ் மென் பொருள் தொகுப்பை ஆப்பிள் கணினியில் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அனேக ஆப்பிள் சாதனங்களிலும் தனது மென்பொருள் வேலை செய்யும் வகையில் உருவாக்கி இருந்தது. அதே போல் தனது நேர் எதிர் நிறுவனமான கூகளின் Play Storeஇல் தனது MS Office மென்பொருள்களை பதிவேற்றம் செய்துள்ளது MicroSoft.
விண்டோஸ் போனில் தனது Gmail App , Google Drive என எந்த சேவையும் கிடைக்காத வண்ணம் தடை போட்டுள்ள கூகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனது மென் பொருளை கிடைக்கும் வகையில் மைக்ரோசாப்ட் எடுத்துள்ள இந்த முடிவை பல ஆன்ட்ராய்டு பயனர்களும் வரவேற்றுள்ளனர்.
இன்னும் ஒரு சில மணிநேரங்களில் உங்களின் Google Play Storeஇல் Office மென்பொருள்களை பதிவிறக்கி நீங்களும் பயன்படுத்தலாம்.
Comments are closed.