659 total views
கடந்த பல ஆண்டுகளாகவே கூகுள் தானியங்கு கார் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்த நேரத்தில் தானியங்கு கார்களை சில நாட்களுக்குள்ளேயே சாலைகளில் உலவ விட சோதனைகள் பல மேற்கொண்டிருந்த நிலையில் கூகுள் அதன் அடுத்த திட்டமான தானியங்கு வேன் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளது.இத்திட்டத்தினை வெற்றிகரமாக செய்துமுடிக்க கூகுள் நிறுவனம் Fiat Chrysler Automobiles (FCA) என்ற மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனத்தின் உதவியினை நாடியுள்ளது. சாதரணமாக தானியங்கு காரில் ஒருவர் அல்லது இருவர் மட்டும் பயணிக்கும்படி இருக்கும். ஆனால் இந்த வேனில் (van ) அதிகப்படியாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பயணிக்கும்படி அமைக்கப்பட உள்ளது.
எனவே செல்ல வேண்டிய இடத்தினை மானிட்டரில் என்ட்டர் செய்தாலே நம்மை பாதுகப்பாக ஓட்டுனரின் உதவி இல்லாமலே இட்டுச் செல்லும். தானியங்கு கார் திட்டமானது வயது முதிர்ந்தவர்களுக்கும், உடல்நல குறைபாடு உடையவர்களுக்கும் கையாளச் சிறந்ததாக இருக்கும். மேலும் தானியங்கு கார்களை சாலைகளில் காண வேண்டுமென்றால் போக்குவரத்து விதிகள் பலவற்றை மாற்றியமைக்கும் கட்டாயமும் ஏற்பட்டதை ஒட்டி தற்போது சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் சில குறியீடுகளும் மாற்றப்பட்டு வருகின்றன.
Comments are closed.