பழுதடைந்த ஸ்மார்ட் போனினை வீட்டிற்கே வந்து சரி செய்து தருகிறது டிஷ் நெட்வொர்க்:
803 total views
ஆம் உடைந்த ஸ்மார்ட் போனினை வீட்டிற்க்கே வந்து சரி செய்து தருகிறது டிஷ் நெட்வொர்க் ஆனால் அந்த சேவை இங்கே இல்லை….அமெரிக்காவில் இந்த யுக்தி கையாளப்பட்டு வருகிறது. டிஷ் நெட்வொர்க் இந்த சேவையின் மூலம் உடைந்த மற்றும் பேட்டரி குறைபாடு கொண்ட ஸ்மார்ட் போன்களை வீட்டிற்க்கே வந்து சரி செய்து தருகின்றனர். இதனை Dish Smart Home Services, என்ற திட்டத்தின் மூலமாக செயல்படுத்தி வருகின்றனர். இவை ஏற்கனவே வை-பை வசதிகளை வீடுகளுக்கு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இதில் ஐபோன் 5, 5C, 5S, 6, மற்றும் 6 Plus ஆகிய போன்கள் மட்டுமே செர்க்கப்படுள்ளன. லேட்டஸ்ட் வகை ஐபோன் மாடல்களான SE, 6S மற்றும் 6S பிளஸ் ஆகியவைகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. இனி சில மாதங்களில் இவையும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆப்பிள் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து வகை மொபைல் தயாரிப்பு நிறுவங்களுக்கும் சேவை வழங்கப்படலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய இடத்திற்கே சென்று அவர்களது சாதனத்தினை சரி செய்து தருகின்றனர். இதுவரை டீ.வி, பிரிட்ஜ் , ஏ.சீ போன்ற ஏலக்ட்ரானிக் பொருட்களை மட்டுமே வாடிகையளரின் இடத்திற்கே சென்று சரி செய்து தந்து கொண்டிருந்தனர். மொபைல் போன் போன்ற சாதனங்களை சரி செய்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவினை தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் படிப்படியாக இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Comments are closed.