உங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும் பேராபத்து

795

 82 total views,  2 views today

தற்போது உள்ள வாட்ஸ் ஆப் வேர்ஷனை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும், எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்தால் பயனாளர்களின் தகவல் திருடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் “தேர்ந்தெடுக்கப்பட்ட சில” பயனாளர்களை குறிவைத்து நடக்கிறது என்றும், “இணையதள செயல்பாட்டில் மதிநுட்பம் மிகுந்தவர்களால்” இது செய்யப்படுகிறது என்றும் முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் குரல் வழி அழைப்பு (வாய்ஸ் கால்) செயல்பாட்டை பயன்படுத்தி, தகவல் பெறுபவரின் சாதனத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். குரல் வழி அழைப்பை ஏற்காவிட்டாலும் கூட, வேவு பார்க்கும் மென்பொருள் அந்த சாதனத்தில் நிர்மாணிக்கப் பட்டுவிடும் .அந்த சாதனத்தில் அழைப்புகளின் பதிவுப் பட்டியலில் இருந்து அந்த அழைப்பின் விவரம் காணாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் போனில் உள்ள (call logs, emails, messages, photos) ஹேக்கர்களின் கையில் சிக்கும் அபாயம் உள்ளது.

You might also like

Comments are closed.