இன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல்

242

 26 total views,  2 views today

“இன்டெல் தயாரித்து வெளியிட்டிருக்கும் ‘சிப்’களைக் கொண்டிருக்கும் கணினிகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.”

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பதோடு இவை இல்லாமல் பெரும்பாலான பணிகளை மேற்கொள்வது சிரமமான காரியங்களாகி விட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாதனங்களில் சிப் சார்ந்த பாதுகாப்பு பிழை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிழை வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் மிக முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருட வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்சோம்பி லோட் என அழைக்கப்படும் பிழைகள்  மைக்ரோ பிராசஸர்களின் வடிவமைப்பு கோளாறு ஆகும்.

இவை கம்ப்யூட்டர் மட்டுமின்றி மொபைல் சாதனங்கள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்படுத்தும் சர்வெர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மையில் இந்த பிழை என்றால் என்ன? இவை என்ன செய்யும்? இவற்றால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

ஸ்சோம்பி லோட் எவ்வாறு இயங்குகின்றது ?

மைக்ரோபிராசஸர்களின் வேகத்தை மேம்படுத்த பின்பற்றப்படும் வழிமுறையை ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் என அழைக்கின்றனர்.

இந்த வழிமுறையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையை க்ரேஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

வழக்கமான சி.பி.யு.க்களுடன் ஒப்பிடும் போது இவை கடினமான பணிகளையும் மிக வேகமாக செய்து முடிக்கும் படி உருவாக்கப்பட்டன. ஸ்பெகுலேட்டிவ் எக்சீகியூஷன் வழிமுறையை பயன்படுத்துவதில் பிராசஸர்கள் மிகப்பெரிய பிழையை இழைக்கின்றன. இந்த பிழை காரணமாக சில பணிகளை பிராசஸர்கள் சரிவர செய்யாது.

இதனால் குறிப்பிட்ட சாதனத்தில் உள்ள தகவல்கள் கசியும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இந்த பிழை ஹேக்கர்களுக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடும் வசதியை ஏற்படுத்துகிறது.

இதனால் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொல், முக்கிய  தகவல்க உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும், பிரவுசர்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல் அல்லது பாஸ்வேர்டு மேனேஜர் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்டவை திருடுபோக வாய்ப்புகள் அதிகம்.

ஆண்டிவைரஸ் பயன்படுத்துவோரும் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது என தெரியவந்திருக்கிறது.இந்த  பிழை இன்டெல் மூலம் இயங்கும் கணினிகள், லேப்டாப் மற்றும் மேக்புக் சாதனங்களை பாதிக்கும்.

இதே போன்று கடந்த வருடம் ஸ்பெக்டர் மற்றும் மெல்ட்டவுன் பாதுகாப்பு குறைபாடு கம்ப்யூட்டர் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இன்டெல் முன்னெச்சரிக்கையாக பிராசஸர்களில் புதிய மாற்றத்தை மேற்கொண்டனர் .மேலும் இந்த பிழை புதிய பிராசஸர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது.இதர வகை பிராசஸர்களுக்கு  பிழையை சரிசெய்யும் மைக்ரோகோட் அப்டேட்யை இன்டெல் வழங்கியுள்ளது.

மேலும் ஸ்சோம்பி லோட் பிழையை சரி செய்ய மைக்ரோசாப்ட்,ஆப்பிள், லீனுஸ் நிறுவனங்கள் விரைவில் அப்டேட்யை வழங்கும் என கூறினார்கள்.

You might also like

Comments are closed.