ஜிட் ஹப் இல் ஹேக்கர்கள் கைவரிசை

31

ஹேக்கர்கள்  சுமார் 392 ஜிட் ஹப் இல் கணக்குகளை உடைத்து பயனர்கள் தகவல்களை திருடிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கணினியையும், அதில் இருக்கும் தகவல்களையும் அன்லாக் செய்ய, குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதே மீட்கும் குறிப்பை அனுப்பியுள்ளது. “உங்கள் இழந்த குறியீட்டை மீட்டெடுக்க மற்றும் அதை லீக் செய்வதில் இருந்து தவிர்ப்பதற்கு: எங்கள் பிட்காயின்முகவரி 1ES14c7qLb5CYhLMUekctxLgc1FV2Ti9DA க்கு மின்னஞ்சல் முகவரிக்கு 0.1 பிட்காயின் (பி.டி.சி) அனுப்பவும் [email protected] என்ற மின்னஞ்சலில் எங்களை தொடர்பு கொள்ளவும் என்றும் கூறியுள்ளனர்.

ஜிட் ஹப் போலவே ஜிட் லேப் மற்றும் பிட்பக்கெட் இயங்குதளமும் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அட்லாசியாவில் இருந்து ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சியாளரின் அறிக்கையின் படி, இந்த தாக்குதல்களால் கிட்டத்தட்ட 1,000 பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 10 நாட்களுக்குள் பணத்தை செலுத்தாவிட்டால், டேட்டாவை அழித்துவிடுவதாக ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஜிட் ஹப் தற்போது பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு அவர்களின் கணக்குகளை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் நாங்கள் வேலை செய்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

You might also like

Comments are closed.