வாட்ஸ்ஆப் பயனாளிகளை மிரட்டும் ஸ்பைவேர்- உங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி

537

 535 total views

“Pegasus என்ற ப்ரோகிராம் மூலமாக இந்த வைரஸை பரப்பி தனித்தகவல்களை திருடிவருவதாக இஸ்ரோவின் சைபர் பாதுகாப்பு அமைப்பான NSO மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது”

WhatsApp spyware hack : உலகில் அதிக அளவிலான வாடிக்கையாளர்களால் குறுஞ்செய்திகள் அனுப்ப பயன்படுத்தப்பட்டு வரும் செயலி வாட்ஸ்ஆப் ஆகும். இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு பிரிவு உலகில் உள்ள அனைவரின் வாட்ஸ்ஆப் செயலிகளை ட்ராக் செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கியது அந்நிறுவனம்.

வாட்ஸ்ஆப் அழைப்பு ஒன்றின் மூலமாக பயனாளிகளின் அனைத்து விபரங்களையும் இந்த வைரஸ் மூலம் திருட இயலும். போன் கால்கள், ஈ-மெயில்கள், போட்டோக்கள், என அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் சென்றுவிடும்.

இது போன்ற அழைப்பு வரவில்லை என்றாலும், உங்களின் டேட்டாக்களை இந்த ஸ்பைவேர் திருடிச் சென்றுவிடும். உங்களின் அனுமதி இல்லாமல் உங்கள் போனின் கேமராக்கள் மற்றும் மைக்ரோபோன் ஆகியவற்றையும் இயக்கும் சக்தி உண்டு இந்த வைரஸ்க்கு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் இந்த ஸ்பைவேர் மூலமாக உங்களின் தகவல்கள் திருடப்படலாம்.

மறுப்பு தெரிவித்திருக்கும் இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு

Pegasus என்ற ப்ரோகிராம் மூலமாக இந்த வைரஸை பரப்பி தனித்தகவல்களை திருடிவருவதாக இஸ்ரோவின் சைபர் பாதுகாப்பு அமைப்பான NSO மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது இஸ்ரேல். தனிப்பட்ட நபர்களின் தகவல்களைத் திருட சொந்த ப்ரோகிராமை யாராவது பயன்படுத்துவார்களா என்று அவ்வமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

யாருக்கெல்லாம் பாதிப்பு

ஆண்ட்ராய்ட் வாட்ஸ்ஆப் வெர்ஷன் v2.19.134 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன் பயன்படுத்துபவர்கள், வாட்ஸ்ஆப் பிசினஸ் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் v2.19.44 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள் பயன்படுத்துபவர்கள், ஐபோனில் v2.19.51 வெர்ஷன் மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள், வாட்ஸ்ஆப் பிசினஸ் iOS v2.19.51 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள், விண்டோஸ் போனில் v2.18.348 வெர்ஷன்கள் வைத்திருப்பவர்கள் இந்த தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களின் சர்வர்கள் அனைத்தையும் அப்டேட் செய்து பாதுகாத்து வருகிறது. மேலும் இது குறித்து அமெரிக்காவின் நீதித்துறைக்கு மனு ஒன்றையும் அனுப்பியுள்ளது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒரே வழி தான் உண்டு. அது உங்களின் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்வது தான்.

You might also like

Comments are closed.