Skype மூலமாக இந்தியாவிற்குள் இருந்து கைபேசிகளுக்கு அழைக்க முடியாது!
1,359 total views
இணையத்தில் இருந்து உலகின் எந்த ஒரு கைபேசி மற்றும் தந்தி இணைப்பு பேசி(Land line) எண்ணுக்கும் குறைந்த செலவில் அழைத்து பேச முடியும் . இது சராசரி ISD கட்டணத்தை விட மிகக் குறைவு.
இந்தியாவில் உள்ள ஸ்கைப் பயனர்கள் ISD அழைப்புகள் மட்டுமல்லாது உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் இணையம் வழியாக அழைத்து பேசிவருவது, இந்தியாவில் உள்ள கைபேசி சேவை நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதால், இனி ஸ்கைப் மென்பொருள் உள்ளூர் கைபேசி மற்றும் தந்தி (Land line) அழைப்புகள் மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என TROI உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது வழக்கம் போல வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அழைப்பது இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அழைக்கும் வசதியை கட்டுப்படுத்தாது.
வரும் நவம்பர் 10 தேதி முதல் இந்த சேவை துண்டிக்கப்பட உள்ளதாக ஸ்கைப் தெரிவித்துள்ளது. VOIP (Voice over Internet Protocol) என்று அழைக்கபடும் இந்த வகையான தொலை தொடர்பு சேவைகளுக்கு என சட்டங்கள் இன்னும் இந்தியாவில் முழுமையடையவில்லை. இந்நிலையில் viber, Whats App போன்ற மென்பொருள்கள் மூலம் தொடர்பு கொள்வதில் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்படுமா எனத் தெரியவில்லை.
ஸ்கைப் போல தானும் VIOP வகை கைபேசி அழைப்பு சேவையை துவங்க உள்ளதாக Whats App நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments are closed.