​ஒபாமா தன் மகள்களை கணினி புரோக்ராம்மிங் படிக்கச் சொல்கிறார்.

69
ரீ-கோட் எனும் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா , இன்று அமேரிக்கா வல்லரசாக இருப்பதன் காரணங்களுள் ஒன்று நம் நாட்டில் உள்ள அதி நவீன தகவல் தொழில் நுட்பத் துறை.
நம் நாட்டில் இந்த நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும் , வல்லுனர்களாகவும் நாம் இருப்பதில்லை. நாம் தொடர்ந்து வல்லரசாக இருக்க வேண்டும் என்றால் நம் குழந்தைகள் பொறியியல், மருத்துவம் படிப்பது போல கணினி நிரலாக்குதல் பயிற்சியை பெற வேண்டும்.
பள்ளிகளில் கணினி நிரல் பயிற்சிகளை இன்னும் ஆர்வமிக்கதாக எப்படி நடத்துவது என நாம் மீளாய்வு செய்ய வேண்டும்.
எனது மகள்கள் இருவரையும் கணினி நிரல்களை கற்கும்மாறு சொன்னேன், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை, ஒரு வேளை நான் தாமதமாக இந்த அறிவுரையை சொல்லிவிட்டேன் போல.
ஒபாமாவின் பேட்டி கருப்பின மக்கள் கணினி துறையில் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதை மனதில் வைத்து சொல்லியிருபதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆம் அமெரிக்காவில் இருக்கும் கணினி நிரலாக்குனர்களில் 70% பேர் வெள்ளையர்கள் அதில் 80% பேர் ஆண்கள். நிரலாக்குதலில் பெண்களின் பங்கு மிக மிகக் குறைவே.
2009இல் இந்த இணைய தளத்தை நான் ஆரம்பித்த போதும் இதே சிந்தனை தான் எனக்கும். தமிழர்கள் கணினித் துறையில் இன்னும் அதிகமாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதாலேயே தமிழில் இந்த தளத்தை ஆரம்பித்தேன். மாறி மாறி நான் குடி புகும் வீடுகளில் உள்ள இணைய இணைப்பு என்னை புதிய பாடங்களை உருவாக்குவதில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த தளத்தை உருவாக்கியதன் நோக்கத்தை தொடர்ந்து செய்ய முயற்சிப்பேன். ​

You might also like
1 Comment
  1. stalin wesley says

    உங்கள் இணையத்தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் பயனுள்ள தாக உள்ளது தொடருங்கள் ..பாராட்டுக்கள்