ஸ்கைப் பெற்றுள்ள லேட்டஸ்ட் அப்டேட் :

0 92

இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவும்  ஸ்கைப்பில் தற்போது ஒரு அப்டேட்டை அறிமுகபடுத்தியுள்ளனர்.   இதில்  ஸ்கைப்பை டேப்லெட்டுகளில்  பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் அம்சங்கள் காத்திருக்கின்றன.   2015 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் ஸ்கைப் ஆன்றாய்டு  பயனர்களுக்கு ஒரு மேம்பாட்டினை அறிவித்திருந்தது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் அப்போது டேப்லட் பயனர்களுக்கென தனியே எந்தவித  முக்கியத்துவம்  தெறிவிக்கப்படவில்லை. மேலும் இவையனைத்தையும்  சேர்த்து ஒட்டுமொத்தமாக ஸ்கைப்    தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.  இதில் கலந்துரையாட  மிகப்பெரிய ஸ்கைப் திரையையும், புதிதாக ஆக்சன் பட்டன்களும்   அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. இந்த  பட்டனை அழுத்துவதனைத் தொடர்ந்து குறுந்தகவல்கள்,  வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் செய்வது சுலபமே!  இதிலுள்ள  ” மல்டி பேன்” வியூ கொண்டு டேப்லட்டில் வீடியோ கால்கள்  செய்யும்போதிலே    குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்ளலாம். மற்றும் கலந்துரையாடல்கள், கோப்புகள் போன்றவற்றை  சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் செயலியின் விரைவான தேடல்களுக்கும்  உதவுகிறது . இந்த லேட்டஸ்ட் அப்டேட்டில் உங்கள் தொடர்பு பக்கத்தில் ஸ்கைப்பில் இல்லாதவர்களையும்   “invite”  பட்டனை அழுத்தி அழைக்கலாம். மேலும்     இதற்கு முந்தைய பதிப்பின்  தரத்தை விட கூடுதல் தரத்தில் பன்முக வேலைகளைச் செய்வதாக  இந்த அப்டேட் இருக்குமென ஸ்கைப் குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். இந்தபுதிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

skype_android_tablet

Related Posts

You might also like

Leave A Reply