புதிய iphone 6 ன் அச்சு கைபேசியை 60 லட்ச ரூபாய்க்கு ebay தளத்தில் விற்பனை!
2,011 total views
அது என்ன அச்சு கைபேசி?
prototype என்பது எந்த இயக்கு தளமும் நிறுவப்படுவதற்க்கு முன்னர் உள்ள நிலை. iphone னின் ios இன்னும் நிறுவாமல் உள்ள இந்த iphone 6 prototype கைபேசியை Verizon நிறுவனம் தவறுதலாக தனக்கு அனுப்பிவிட்டதாக இவர் தெரிவி்த்துள்ளார்.
இதற்கு ஏன் இவ்வளவு விலை?
இது போன்ற prototype போட்டி நிறுவனங்கள் கைக்கு வந்தால், அவர்கள் தங்களின் OS க்கு ஒத்த செயல்திறன் ஏதும் உள்ளதா என ஆராய்ச்சி செய்வர்.
Hacker கள் கையில் இது கிடைத்தால் iphone 6 ஐ எந்தெந்த முறைகளில் தாக்கலாம் என பரிசோதனை செய்வார்கள்.
வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் கையில் இது போனால், அதிக அமெரிக்கர்கள் பயன்படுத்தும் iphone 6 மூலம் எப்படி உளவு பார்ப்பது என பரிசோதிக்கும்.
யார் வாங்கினார்கள் ?
ebay இணையதளத்தில் $999 க்கு விற்க்கப் போவதாக பட்டியலிட்ட இந்த கைபேசியை, சுமார் 200 பேர் ஏலம் கேட்டு $100 000 க்கு ஏற்றி உள்ளனர்.
இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் ஆப்பிள் நிறுவனம் ebay நிறுவனத்தை தொடர்பு கொண்டு யாரும் வாங்கிவிடாமல் தடுத்துள்ளது.
ஆனால் அவரிடம் இருந்து ஆப்பிள் நிறுவனமோ அல்லது வேறு எவரும் வாங்கி விட்டார்களா என இன்னும் தெரியவில்லை.
Comments are closed.