முகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது ​இணையதளம் ​

669

 1,572 total views

முகநூல்  நிறுவனம் தனது  பங்குசந்தை  வருமானத்தை குறிவைத்து தினந்தோரும் எதேனும் புதியமுயற்சியை செய்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது அலுவலகபயன்பாட்டிற்க்காண ஒரு தளத்தை அது  வடிவமைக்க இருப்பதாக செய்திகள்  வருகின்றன. சமூக வலைதளங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் முகநூல், தற்போது அலுவலக உபயோகத்திற்கான பிரத்யேக தளத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

  ஏற்கனவே அலுவலக ரதியிலான உபயோகத்திற்கான இணையதளமாக ‘லிங்கிடு இன்’ உள்ளிட்ட சில தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை சில நாடுகளில் சிறப்பாக உபயோகப்படுத்தப்பட்டாலும்,அவை முகநூல் போன்ற வரவேற்பையும் பயனீட்டாளர்களின் விருப்பங்களையும் அனைத்து நாடுகளிலும் பெறவில்லை.

index

  இந்த நிலையில் ‘FaceBook at work’ என்ற புதிய திட்டத்துக்கான பணிகளை முகநூல் நிறுவனம் ரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இந்த பணியில்தீவிரம் காட்டி வருவதாகவும் ‘தி ஃபினான்ஷியல் டைம்ஸ்’ தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

  இந்த புதிய இணையதளம் பயனீட்டாளர்களுக்கு தங்களது தனிப்பட்ட முகநூல் பக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட அளவில் அமைய வேண்டும் என்றும், இதில், முகநூலின் பிற அம்சங்கள்வந்துவிடக் கூடாது என்பதிலும் முக்கியத்துவம் செலுத்தி முகநூல் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

  முகநூல் நிறுவனம் அலுவலக பயன்பாட்டிற்கான பிரத்தியே தளத்தை உருவாக்கி வருவதாக இதற்கு முன்னர் பலமுறை செய்திகள் வெளியாகி உள்ளன. அவை மின்  அஞ்சல் சேவைகள், செய்தி, அரட்டை வசதிகள் கொண்டவையாகவும், அலுவலக பணிகளுக்கு ஏற்ற அம்சங்களை பூர்த்தி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Electronic cables are silhouetted next to the logo of Facebook in this illustration photo in Sarajevo

ஆனால் இதுவரை இது தொடர்பான அதிகாரப்பூர்வஅறிவிப்பை முகநூல் நிறுவனம் வெளியிடாத நிலையில், இம்முறை வந்துள்ள செய்தி உண்மையாக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு சமூக வலைதள ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  சமுகவலைதளமாக  துவங்கிய முகநூல் இணைரதியிலான எல்லா தொழில் வாய்ப்புகளையும்  ஆக்கிரமித்து வளர்வது குறிப்பிடத்தக்கது.

  இது போன்ற புதிய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே பங்கு சந்தையில்  பல தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரியாமல் இருக்கும். மைக்ரோசாப்ட்  தனது MS Office ஐ  Apple iPhone க்கு வெளியிடுவதும் இது போன்ற நடவடிக்கைகளுள் ஒன்றே ஆகும்.

You might also like

Comments are closed.