$1000 மதிப்பை தொட்டது எதிரியம்

1,014

 597 total views

பிட்காயின் போல சுமார் 1300 விதவிதமான இணைய பணம் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பலவும் கிட்டத்தட்ட ஒரு ஜெராக்ஸ் காப்பி போன்ற பயனற்ற பணங்களே ஆகும்.
ஆனால் ஒரு சில இணைய பணம் அதற்கென்றே உரிய தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.  இந்த வகை பணம் மிக மிக குறைவாகவே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எதிரியம் (ETH) பணம் என்பதையும் தாண்டி மென்பொருள் உருவாக்கம் மற்றும் பிற வகை உபரி பணத்தையும் உருவாக்கும் ஒரு நிரல் மேடை போலவும் (blockchain platform) செயல்படுகிறது.
ETH எனும் குறியீடால் அழைக்கப்படும் எதிரியம் இன்று (ஜனவரி 4 2017) $1000 அமெரிக்க டாலர்கள் எனும் மதிப்பில் வர்த்தகம் ஆகிறது.  கடந்த 4 மாதங்களாக பிட்காயின்(BTC), லைட்க்காயின்(LTC) உட்பட பலவும் 300% வரை அதன் மதிப்பு உயர்ந்துள்ளது.  ரிப்பில்(XRP) எனப்படும் பணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. வெறுமனே செய்திகள், பிரபலங்களின் பேட்டிகள் பார்த்து மக்கள் ரிப்பில் பணத்தை அதிக மதிப்பில் வாங்கி குவிக்கிறார்கள்.
வேறு எந்தவகை பணத்தை வாங்குவதை விட ETH பணத்தை வைத்திருப்பது சந்தை மதிப்பில் பாதுகாப்பானதாக தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன்.

You might also like

Comments are closed.