பேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்

918

 613 total views

புகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் வலைதளத்தின் உரிமையாளரான மார்க் ஜூகர்பெர்க் (Mark Zuckerberg) தன்னுடைய நிறுனத்தின் மூலமாக மெய்நிகர் நாணயத்தை (cryptocurrency) உருவாக்கி புழக்கத்தில் விடப்பபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜூன் 18 ம் தேதி  க்ரிப்டோகரென்சி வெள்ளைத் தாள்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு சொந்தமாக மெய்நிகர் நாணயம் ( GlobalCoin) என்னும் பிட்காயினை உருவாக்கி 12 நாடுகளில் பொதுமக்கள் புழக்கத்தில் விடப்போவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாணயத்தின் மூலம் மின்னணு பணப்பரிவர்த்தனை திட்டத்தையும் (digital payment system) அடுத்த ஆண்டில் தொடங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இது மிகவும் பயனள்ளதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய உலக நாணயத்தை செயல்படுத்துவது வெஸ்டர்ன் யூனியன் (Western Union) பணப்பரிமாற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக டிஜிட்டல் பரிமாற்றங்களை எளிமையாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதோடு வங்கிகள் மற்றும் தரகு நிறுவனங்களுடனும் ஃபேஸ்புக் நிறுவனம் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பேஸ்புக்கின் குளோபல் காயின் கிர்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் பேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Comments are closed.