பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle
531 total views
பிட்காயின் எனப்படும் புதிய வகை பணத்தின் பின்னணியில் பிளாக்செயின் (Blockchain) எனும் தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “திருத்தங்கள் செய்ய முடியாத நிலையான கணினி தரவுகளை சேமிப்பது” எனும் முறை உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை தங்கள் மென்பொருள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என நினைத்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், அதிக முதலீட்டில் தங்கள் நிறுவனத்தில் உள்ள பொறியாளர்களை வைத்து Blockchain தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
முதலில் IBM நிறுவனம் தனது பொறியாளர் குழுவை Linux Foundation இன் HyperLedger எனும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் Fabric எனும் பிரிவில் அதிக பங்களிப்பு செய்து வந்தது. தனது வாடிக்கையாளர் நிறுவனங்களை அனுகி இந்த தொழில்நுட்பத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து வந்தது.
தற்போது பிரபல Database நிறுவனம் Oracle ப்ளாக்சேயின் தொழில்நுட்பத்துடன் இணைத்து செயல்படும் வகையில் தனது பங்களிப்பையும் கொடுக்க ஆரம்பித்துள்ளது. Oracle Blockchain தொடர்பான செயலிகள் Hyperledger Fabric v1.3 உடன் ஒத்திசைந்து செயல்பட வல்லது என தெரிவித்துள்ளது.
விரைவில் Oracle நிறுவன வாடிக்கையாளர்களும் ப்ளாக்சேயின் தொழில்நுட்பத்தில் தங்களின் மென்பொருட்களை மேம்படுத்த உள்ளனர்.
நீங்கள் ஏற்கனவே மென்பொருள் வல்லுனராக இருந்தால் IBM HyperLedger Fabric கற்றுக்கொள்வது உங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.
Comments are closed.