பிட்காயின் மதிப்பு இருபது மடங்கு உயர்வு

970

 1,114 total views

இந்தியாவில் பிட்காயின்  உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களை வாங்கி விற்பவர்களின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்து கொண்டயே போகிறது .இதனால் கடந்த ஐந்து மாதம் இல்லாத அளவில் பிட்காயின் தற்போது  இருபது மடங்கு உயர்ந்துள்ளது.

இன்றைய பிட்காயின்  மதிப்பு 5000 டாலரை தொட்டுள்ளது இந்தியா மதிப்பிற்கு 3,47,627.50 ரூபாய் ஆகும்

2017 ஆண்டு அக்டோபர் மாதம் 4,000 டாலராக இருந்த பிட்காயின் அசுர வளர்ச்சி பெற்று அடுத்த இரண்டு மாதத்தில் பிட்காயின் 20,000 டாலரினை எட்டியது. ஆனால் 2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது  பிட்காயின். இந்தச் சரிவுக்கு வரி, பல நாடுகளில் ஏற்பட்டு வரும் தடை, விதிமுறை கட்டுப்பாடுகள், ஹாக்கிங் மோசடிகள் போன்றவையே என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட இந்த திடீர் ஏற்றத்திற்கு, அமெரிக்க அடிப்படையிலான Coinbase மற்றும் Kraken மற்றும் லக்சம்பர்க் நாட்டின் Bitstamp சுமார் 10 கோடி டாலர் அளவுக்கு பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக cryptocurrency நிறுவனத்தின் BCB(BITCOIN BROKERAGE) குழு தலைமை நிர்வாகி ஆலிவர் வான் லாண்ட்ஸ்பர்க்-சாடி தெரிவித்தார்.

பிட்காயின் மதிப்பு அதிகரித்ததை முன்னிட்டு அதன் வர்த்தகம் வழக்கமானதை விட மூன்று மடங்கு உயர்வை கொண்டு ஒரு மணி நேரத்தில் 60 லட்சம் வர்த்தகம் ஏற்பட்டது என தலைமை நிர்வாகி ஹேய்டர் கூறினார்.

பிட்காயின் வளர்ச்சியை தொடர்ந்து பிட்காயின் அல்லாத இதர நனையங்கள் ஆல்ட்காயின் , எதீரியம் ,ரிப்பிள் என்ற கிரிப்டோ நாணயமும் கடந்த ஒரு நாளில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிட்காயின்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் வழிமுறைகள் அனைத்தும் போட்டித்தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதால் இலாபத்திற்கான உத்தரவாதமும் இல்லை,” என்றும் பிட்காயின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Comments are closed.