பிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது

1,255

 617 total views

பிட்காயின் எனப்படும் பணம் BTC எனும் குறியீட்டால் அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க இணையத்தின் வழியே உருவாக்கப்பட்ட பணம் இது. அரசாங்கம், வங்கிகள் கட்டுப்பாடு இன்றி எவராலும் உருவாக்கக்கூடிய , கையாளக்கூடிய இணையவழி பணம் இது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல பணக்காரர்கள் ஒரு முதலீடாக இந்த பணத்தை வாங்கி குவிக்கிறார்கள். இதனால் இதன் விலை இந்த ஆண்டு ஜனவரியில் $1000 டாலராக இருந்தது இன்று இது $10000 பத்தாயிரம் டாலராக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

முழு பிட்காயினாக இல்லாமல் தசம மதிப்பிலும் நீங்கள் இதை கையாளலாம். 0.0001BTC

இதேபோல எதிரியம் (ETH ), லைட் காயின் (LTC ) என இரண்டு வகை பணமும் உள்ளன. இவற்றின் விலை 30,000 எனும் அளவில் உள்ளது.

முதலீட்டு எச்சரிக்கை: Crypto Currency என்றழைக்கப்படும் இந்த வகை பணத்தின் பின்புலம், சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல், அரசு கட்டுப்பாடுகள் அறிந்து உங்கள் பணத்தை முதலீடு செய்யவும்.

ஒரே நாளில் பலமடங்கு மதிப்பு குறையவும் வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை: பிட்காயின் போல சுமார் 900 விதமான இணைய பணம் உலவி வருகிறது.யார் வேணாலும் பிட்காயின்_மதுரை என்று கூட உருவாக்க முடியும் இதுவும் பிட்காயின் தான் ஆனால் குறைந்த விலைக்கு தருகிறோம் என ஏமாற்றும் மோசடிகள் நடந்து வருகிறது. BTC எனும் குறியீடு இல்லாத பணம் பிட்காயின் அல்ல. ​

You might also like

Comments are closed.