உங்கள் கணினி கோப்புகளைத் தேட உதவும் Google Desktop

482

 1,442 total views

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கூகல் தயாரிப்பு தான் என்றாலும் இப்போது Google Desktop Search பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வருகிறது.

இதன் பயன்கள்:

1. உங்களது C:  D:  E:  ட்ரைவ்களில் உள்ள அனைத்து கோப்புகழும் கூகிலின் Desktop Search Indexல் அட்டவணைப்படுத்தப்படும்.

2.  நீங்கள் Outlook, Thunderbird  என எந்த மின்னஞ்சல் பயன்பாட்டு மென்பொருள் பயன்படுத்தினாலும், அதில் உள்ள மின்னஞ்சல்களும் இதனால் தேடி கண்டுபிடிக்கப்படும்.

3. நீங்கள் எப்போதோ உங்கள் நண்பரிடம் “Chat” செய்த விசயத்தை நினைவு கூர்ந்து பார்க்க நினைத்தால், இது உங்கள் MSN and Pidgin மென்பொருள்களின் “Chat Log” கோப்புகளில் இருந்து தேடித் தரும்.

எவ்வாறு பயன்படுத்துவது?

1.  http://desktop.google.co.in/en/?ignua=1 இந்த தொடுப்பில் இருந்து நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

2. இதை நிறுவுவது மிகவும் எளிது.

3. Windows, Linux & Mac OS லும் இதை நிறுவ எதுவான பதிப்புகள் உள்ளன.

கணினியில் பல கோப்புகளை வைத்துப் பயன்படுத்தும் நண்பர்கள் இந்த இலவச வசதியைப் பயன்படுத்தி கோப்புகளை தேடி எடுக்கும் தலைவலியைக் குறைக்கலாம்.

You might also like

Comments are closed.