தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
நான் விண்டோஸ் 8.1 பயன் படுத்துகிறேன். என் கம்ப்யூட்டர் இல் windows defender  antivirus  செயல்படுகிறது. இது மேலும் சிறப்பாக செயல்படுகிறதா இல்லை வேறு  anti virus க்கு மாற தகவல் கூறவும். மேலும் விண்டோஸ் 8 & 8.1 இல் வேறு anti virus பயன்படுத்த முடியுமா என்று கூறுங்கள்.
in Internet by இளையோர் (200 points)

Please log in or register to answer this question.

1 Answer

+1 vote
Windows Defender என்பது முன்னைய வின்டோஸ் வேர்சங்களிலும் இருந்தது என்றாலும்,அதிக சலுகைகள் இருக்கவில்லை.அதனால்தான் அப்போது மைக்ரொசொப்ட்  Microsoft Security Essentials என்ற அன்டிவைரஸை முழுப் பதிப்பாக உருவாக்கி இலவசமாகத் தந்தார்கள். 2012 இல் முதல் தரத்தில் இருந்த MSE சென்ற வருடம் மூன்றாவது இடத்திற்கு சென்றது. காரணம் மூன்றாம் தரப்பு அன்டிவைரஸ்கள் வியாபார நோக்குடன் இயங்கியதால், பல விதத்திலும் தரத்தை போட்டி போட்டுக் கொண்டு  உயர்த்தியது தான்.நாளை இவை கூட தரத்தில் மாறுபடலாம்.WD முதல் இடத்திற்கும் செல்லலாம்.
Windows Defender உம் MSE உம் interfaces  ஒன்றாகவே உள்ளன. அதிக வித்தியாசம் கிடையாது.  இன்றைய அன்டிவைரஸ்களில் எவையும் 100 வீதம் பாதுகாப்பானவை அல்ல என்பதை ஒத்துக் கொண்டாகவே வேண்டும்.

இப்போது உங்கள் கேள்விக்கு வந்தால், பொதுவாக விண்டோஸ் 8/8.1 இல் உள்ள Windows Defender போதுமானதாகும்.(2015 இல் வர இருக்கும் விண்டோஸ் 9 இலும் windows  defender  built  in  ஆக வருகிறது.) Third Party Antivirus சில WD ஐவிட சிறிது அதிக பாதுகாப்புடையது என்பதை மறுக்க முடியாது.ஆனால் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,one donkey at a time, என்பது போல் ஒன்றுக்கு மேற்பட இன்ஸ்டால் செய்தால் சில மாதங்களில் அல்லது உடனே conflict வர வாய்ப்புக்கள் அதிகம்.அதனால் ஒன்றை வைத்திருப்பதுதான் சிறந்ததாகும். Third party antivirus (Avast,AVG,Panda......) இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால்,WD ஐ நிறுத்தி,off செய்து விட்டு ஒன்றை மட்டும் பாவிக்கலாம்.
அதே சமயம் சில அன்டிவைரஸ்கள் இரண்டாவது ஒன்றை இன்ஸ்டால் செய்ய customs install என்ற முறையில் அனுமதிக்கிறது.

WD வைத்துக் கொண்டால்,சந்தேகம் பயம் இருந்தால்,வாரம் ஒருமுறை Malwarebytes மூலம் ஸ்கான் செய்து கொள்ளலாம்.ஆபத்தான இணையப் பக்கங்களுக்கு செல்லாமல் விடலாம். மென்பொருள் போன்ற எதையாவது தரவிறக்கம் செய்யும் போது, இணையத்தில் வைத்தே வைரஸ்,மால்வெயர் ஸ்கான் செய்தபின் தரவிறக்கலாம்.
எனவே நாம் சில பாதுகாப்பு முறைகளைக் கையாண்டாலே போதுமானது. ஒவ்வொருவர் சொல்லும் போதும் பயமுறுத்தும் போதும் அங்கேயும் இங்கேயும் ஓட வேண்டியதில்லை.

WD முதலாவது இடத்தில் இல்லாத போதும் கூட,சிறந்தது தான். மால்வெயர்களைக் கண்டறிவதில் சிறிது குறைபாடுகள் இருப்பதற்காக வேறொன்றை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.
வேறொரு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்வதாயின் WD ஐ action  center  சென்று off  செய்து விட்டு ,இன்ஸ்டால் செய்வது conflict  வராமல் தடுக்கும். ஒன்றை மட்டும் பாவியுங்கள்.
தமிழில் கேள்வி கேட்டதற்கு நன்றி.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
asked Feb 6, 2012 in Internet by வல்லுநர் (3.1k points)
+1 vote
1 answer
asked Mar 13, 2012 in Internet by இளையோர் (300 points)
+1 vote
1 answer
asked Dec 16, 2011 in Internet by புதியவர் (130 points)
+1 vote
2 answers
asked Jun 8, 2012 by ஆர்வலர் (400 points)
+1 vote
1 answer
asked Jan 21, 2012 by ஆர்வலர் (920 points)
...