பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.
1,691 டேப்களில் பக்கங்களை ரீலோட் செய்ய
790 total views
நான் பயர்பாக்ஸ் உலவியையே எனது கணினி மற்றும் மொபைலில் பயன்படுத்தி வருகிறேன், அனைவரையும் பயர்பாக்ஸை பயன்படுத்தவே நானும் அறிவுறுத்தி வருகிறேன். கூகள் குரோமிற்கு சிறந்த மாற்று மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox) தான்.
கட்டற்ற & இலவச இணைய உலவியான மோசில்லா பயர்பாக்ஸ் இன்று தனது 55ம் பதிப்பை வெளியிடுகிறது.
WebVR Virtual Reality Support:
கணினி (டெஸ்க்டாப்) உலவியிலேயே VR (கானல் காட்சி) வகை வீடியோக்களை பார்க்கும் வசதியை இன்று வெளியிடுகிறது. இதன் மூலம் உங்களிடம் VR கண்ணாடி இருந்தால் உங்கள் கணினியில் உள்ள புதிய பயர்பாக்ஸ் உலவியில் VR அனுபவத்தை பெறலாம்.
Performance Updates:
64 பிட் பதிப்பு பயர்பாக்ஸ் அதிகமாக முறை கிராஷ் (Crash) ஆவதை தடுக்க பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கூகள், விக்கிபீடியா, யூ டியூப் போன்ற தளங்களில் தேடுவதை உலவியில் இருந்தே தேடி எடுக்கும் வகையில் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
Comments are closed.