​ரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்கிறார்.

60
இந்தியாவில் மின் வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. FlipKart, Amazon, eBay, SnapDeal போன்றதளங்கள்  அதிகமான வருமானம் ஈட்டி வருகின்றன.

FlipKart நிறுவனம் 1பில்லியன் டாலர் (6000 கோடி ருபாய்) அளவிற்கு புதிய முதலீடுகளை பெற உள்ளதாக அறிவித்த இரண்டு நாட்களில் அமேசான் நிறுவனம் தாங்கள் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் (12000 கோடி ருபாய்) முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தது.

மேலும், நாங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் மின் வணிகம் செய்கிறோம் ஆனால்,இந்தியாவைப் போல் எந்த நாட்டிலும் முதல் ஆண்டு வருமானம் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிவித்தது.
snapdeal_logo_new

பெருகிவரும் இணையப்  பயன்பாடு மட்டுமே இந்தியாவின் மின் வணிக வளர்ச்சிக்கு காரணமில்லை.

இணையத்தில் வாங்கும் பொருள் வந்து சேருமா சேராதா எனும் சந்தேகம் நம் அனைவருக்கும் எப்போவும் இருக்கும். இதனாலேயே COD (Cash on Delivery) போன்ற திட்டங்களை அறிமுகம் செய்து அதிகமான மக்கள் இணையத்தில் இருந்து பொருள் வாங்க வைத்துள்ளன இந்த நிறுவனங்கள்.

eBay / OLX  போன்ற நிறுவனங்கள் தனி மனிதர்களும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய வழிசெய்கின்றன.
ஆதலால், வளர்ந்து வரும் இந்தத் துறையில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாகவும். தான் விரைவில் பணி ஓய்வு பெற இருப்பதால் தனிப்பட்ட முறையில் SnapDeal தளத்தில் முதலீடு செய்ய விருப்பமாக உள்ளதாக ரத்தன் டாட்டா தெரிவித்துள்ளார்.

 

You might also like