உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை ஒருவர் என பேசுகிறார் என அறியும் தொழில்நுட்பத்தினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதனால் ஒரு சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும்.குற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு இது உதவும் என இதனை உருவாக்கியுள்ள பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.ஆனாலும் இது பிரபலங்களின் கதைகளை தேடி வெளியிடும் ஊடகவியலாளர்களாலும் கூட பயன்படுத்தப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான moduleஐ பலவகையான உதடு அசைவுகளுக்கு பயிற்றுவித்தது வருகின்றனர்.இதனால் அதன் துல்லியத் தனமையை அதிகரிக்க உள்ளனர்.மேலும் football,cricket, மற்ற பிற விளையாட்டுகளில் ஆடுகளங்களில் விளையாட்டு வீரர்கள் என்ன பேசி கொள்கிறார்கள் என்பதும் தெரிந்து கொள்ளலாம்.கூடவே வாய் பேச முடியாதவர்கள் என்ன பேசவிளைகிரார்கள் என்பதும் அறியப்படும்.
Comments are closed.