746 total views
பிரபல லேப்டாப் நிறுவனமான லெநோவோ ThinkPad X1 என்ற புதிய வகை லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ThinkPad வரிசையிலேயே இந்த லேப்டாப் மிக சிலிம்மா௧ உள்ளது(16.5mm (0.65 inches)).பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஸ்ஸா௧ உள்ளது. கீறல்கள் ஏற்படாமல் இருக்க scratch-resistant panel கொண்டு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன் எடை 1.36-1.72 kg வரை உள்ளது. வழக்கமான வால்யூம் மற்றும் மியூட் பொத்தான் லேப்டாப்பின் மேல் இல்லாமல் ஓர் வரிசையில் நேராக உள்ளது. இதன் திரை durable Corning Gorilla Glass (13.3-inch) எனும் தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுளது.
3G வசதி விரும்பும் நபர்களுக்காக Sim card Slotter கொடுக்கப்பட்டு உள்ளது.
இதன் கீபோர்டு Waterproof backlit Keyboard ஆகும். இதன் ஒலி அமைப்பு தரம் மிகுந்து உள்ளது (High Defi nition (HD) Dolby Home Theater v4). இதன் வெப்கேம் மிகத்தெளிவான புகைப்படங்களை எடுக்கவும் வீடியோக்களை பதிவு செய்யவும் சிறந்ததாகும்(720p webcam).
இந்த லேப்டாப் Intel Core i5 processor உதவியுடன் இயங்குகிறது. இதன் கிராபிக்ஸ் அற்புதமாக உள்ளது (integrated Intel HD 3000 graphics). இதன் நினைவகம் 4GB RAM மற்றும் 320GB HDD ஆகும்.
Windows 7(32-bit) operating system கொண்டு உள்ளது.FingerPrint reader கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிற லேப்டாப்களில் உள்ளார்போல் Bluetooth,WiFi போன்ற வசதிகளும் உள்ளன.
Lenovo ThinkPad X1 Skype 4.2 , Microsoft Office 2010 Starter, Norton Internet Security 2011 போன்ற மென்பொருள்களை உள்ளடக்கி உள்ளது.
இதன் பெரிய குறைகள் என்று இரண்டை குறிப்பிடலாம்.
1.இதன் மின்திறன் நேரம் மிக குறைவு. இதனால் நீண்ட தூர பயணம் மேர்கொள்பவர்கள் சிரமப்படுவர்.
2.இதன் Display திரை அதிகமாக பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.
இது விற்பனைக்கு வரும்பொழுது இதன் விலை 90,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Comments are closed.