உலகின் முதன்மை பண பரிமாற்ற நிறுவனமான VISA ஐந்து வருட ஆராய்ச்சி, வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம் தொடர்பான 1200 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை InfoSysக்கு வழங்கியுள்ளது.
ஏற்கனவே தனியாக ஒரு ஆராய்ச்சி மையம் ஒன்றை பெங்களூரில் தனியாக நிறுவியுள்ள விசா, வரும் மூன்று ஆண்டுகளில் அம்மையத்தில் மட்டும் 1000 வல்லுநர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. விசா நிறுவனத்தின் அனைத்து பணிகளும் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களால் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. RS Software, CSC, HCL Technologies, Cognizant, Ness Technologies, Fractal Analytics and Altimetrik ஆகிய நிறுவங்களுக்கும் தொடர்ந்து புதிய ஒப்பந்தங்களை விசா வழங்கி வருகிறது.

தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
You might also like
Comments are closed.