இது ரத்த பூமி என அறிந்துகொண்ட Twitter பொறியாளர்கள்.

0 87
நாம் இன்று பயன்படுத்தும் அநேக இணையதளங்களும் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியிலோ அல்லது சென்னை/ பெங்களூரு/ நொய்டா  போன்ற அதிவேக இணையம் உள்ள இடங்களில் வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிக ட்விட்டர் பயனாளர்களைக் கொண்டுள்ளது., எங்கோ சான் பிரான்சிஸ்கோவில் உட்கார்ந்து கொண்டு ட்விட்டர் தளத்தை எவ்வாறு இந்தியாவில் பிரபலபடுத்தலாம் என யோசிப்பதை விடுத்து .,

வாங்க, இந்தியாவிற்கே போகலாம் என இங்கே வந்து நமது 2G வேகம் கைபேசியில் எப்படி உள்ளது., சமீபத்தில் தாங்கள் அறிமுகம் செய்த புதிய வசதிகள் நம் 2G/Edge வேகத்தில் ஆமை போல எப்படி வருகிறது.. என தனது பொறியாளர்கள் மட்டுமல்லாது பிற மேலாண்மை, விளம்பரத் துறை அதிகாரிகளையும் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார் ட்விட்டர் தலைவர். ஆதாலால், எந்த ஒரு புதிய வசதியை ட்விட்டர் அப்ப்ளிகேசனில் கொண்டுவந்தாலும் அது இந்தியாவில் இருக்கும் 77% பெரும்பான்மை 2G பயனாளர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஒரு பாடம் போல் படித்துச் சென்றுள்ளது ட்விட்டர் படை.
twitter

இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா ஒரு நல்ல இடம். சீன அரசு ட்விட்டர் போன்ற பல தளங்களுக்குத் தடை  விதித்துள்ளது. இருந்தாலும் பலரும் திருட்டுத் தனமாக (VPN virtual private network) பார்த்தே சீன பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது., ஹாங் காங்கில்  ஒரு அலுவலகம் திறக்கலாமா என்றும் ட்விட்டர் யோசித்து வருகிறது.

இதற்கிடையே., தங்களின் பயனர்களின் விவரங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து கேட்டு வருவதாகவும். அடிக்கடி இப்படி கேட்டு வருவதை எதிர்த்து ட்விட்டர் அமெரிக்க அரசுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அமெரிக்க அரசு ட்விட்டர் , கூகல் , முகநூல்  தளங்களில் உள்ள பயனர்கள்  அவர்களின் இருப்பிடம் மற்றும் பல விவரங்களை நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே தன் தேவைக்கு ஏற்ப கேட்டுப் பெற்றுக்கொண்டு வருகிறது.
 

Related Posts

You might also like

Leave A Reply