அதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்

832

 730 total views

“ஆப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.”

ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்க்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய மேக் ப்ரோவுடன் 6K HDR மாணிட்டரான ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடலையும் ஆப்பிள் அறிமுகம் செய்தது.

டிராஷ்கேன் வடிவமைப்பு, குறைவான அப்கிரேடுகள் காரணமாக 2017 ஆம் ஆண்டே ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ சாதனத்தை மேம்படுத்துவதாக அறிவித்தது. எனினும், மேக் ப்ரோ அப்டேட் காலதாமதமாகி (ஜூன் 3) நடைபெற்ற டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மேக் ப்ரோ சாதனத்தின் வடிவமைப்பு முந்தைய மேக் ப்ரோவை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய மேக் ப்ரோவும் ஸ்டீல் பாடி, முன்புறம் மெஷ் பேனல் மற்றும் மேல்புற கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களே இயக்கக்கூடிய வகையில் எட்டு PCIe ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஆப்பிள் புதிதாக MPX மாட்யூல் ஒன்றை வடிவமைத்துள்ளது. இது PCIe மற்றும் தண்டர்போல்ட் 3 கனெக்டிவிட்டியை இணைக்கிறது. இதன் மூலம் கம்ப்யூட்டர் மிக எளிதாக குளிர்ச்சி பெறும். மேக் ப்ரோ மாடலில் 8-கோர் 3.5GHZ இன்டெல் சியான் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இது 12 கோர், 16 கோர், 24 கோர் மற்றும் 28 கோர் போன்ற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதன் மெமரி 1.5 டtb(1500GB) துவங்கி பயனர்கள் அதிகபட்சம் இரண்டு MPX மாட்யூல்களை கான்ஃபிகர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் AMD ரேடியான் வீகா II ஜி.பி.யு.க்களும் அதிகபட்சம் 56 டெராஃபிளாப்கள் கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.

இதன் பேஸ் மாடல் விலை 5,999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4,15,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 32 GB ரேம், 256 GB எஸ்.எஸ்.டி. மற்றும் AMD ரேடியான் ப்ரோ 580X gpu வழங்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த மாடல்களின் சிறப்பம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதன் கனெக்டிவிட்டியை பொருத்தவரை தண்டர்போல்ட் 3, யு.எஸ்.பி. டைப் ஏ, டூயல் 10 ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட்கள், வைபை, ப்ளூடூத் 5 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் எடை 18 கிலோ ஆகும். மேக் ப்ரோ பயனர்கள் ஆப்பிளின் புதிய ஆஃப்டர்-பர்னர் எனும் சாதனத்தை சேர்த்துக் கொள்ள முடியும். இது ஆட்-இன் வீடியோ அக்சல்லரேட்டர் கார்டு ஆகும். இதை கொண்டு 8K தரத்தில் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும்.

மேக் ப்ரோ சாதனத்துடன் ஆப்பிள் அறிமுகம் செய்த ப்ரோ டிஸ்ப்ளே XDR சிறப்பான வடிமைப்பை கொண்டிருக்கிறது. இது மேக் ப்ரோ சாதனத்திற்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோ டிஸ்ப்ளே XDR 32-இன்ச் 6K ரெட்டினா மாணிட்டர் ஆகும்.

இது அதிகபட்சம் 1600நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1,000,000:1 காண்டிராஸ்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது. இதனை ஆப்பிள் எக்ஸ்டிரீம் டைனமிக் ரேன்ஜ் என அழைக்கிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய மாணிட்டர் 10-பிட் கலர் மற்றும் சூப்பர் வைடு வியூவிங் ஆங்கில்களை வழங்கும் என தெரிவித்துள்ளது.

இந்த மாணிட்டரின் விலை 4999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,45,933) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பேனல் கொண்ட ஆன்டி-கிளேர் ஆப்ஷன் விலை 5000 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கழற்றக்கூடிய ப்ரோ ஸ்டாண்டு விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.69,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிகபட்சம் ஆறு 6K ப்ரோ டிஸ்ப்ளே XDR மாணிட்டர்களை இயக்கும் வல்லமை கொண்டுள்ளது.

You might also like

Comments are closed.