சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. எனவே டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலிகள் தளங்களிலிருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில், டிக்டாக் செயலி புதிய சர்ச்சையில் சிக்கியது, அது என்னவென்றால் அமெரிக்காவில் உள்ள குழுந்தைகளின் ரகசிய தகவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக்டாக் செயலி மீது குற்றம் சாட்டப்பட்டது.
அமெரிக்காவில் 13வயதுகுட்பட்ட சிறுவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விவரத்தை சேகரிக்கும் போது அவரவர்களின் பெற்றோர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும். ஆனால் அந்த விதியை டிக்டாக் செயலி கடைபிடிக்கவில்லை என்றும் விதியை மீறி குழந்தைகளின் தகவல்களை திரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் டிக்டாக் செயலிக்கு இந்திய மதிப்பில் சுமார் நாற்பது கோடி ரூபாய் அபராதமாக விதித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிக் டாக் நிறுவனம் “இந்தியாவிற்கான உள்ளடக்கத்தைக் கண்காணித்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமான விதிகளை மதிக்காத வீடியோக்களை நீக்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து பைட்டான்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. தனது மேடையில் மூன்றாம் தரப்பினரால் பகிரப்படும் வீடியோக்களுக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று நிறுவனம் வாதிட்டது. மற்ற சமூக ஊடகங்கள் போலவே தாங்களும் செயல்படுவதாகவும், இந்த தடை பாரபட்சமானது என்றும் நிறுவனம் வாதிட்டது.
இதனிடையே, இந்தியாவில் Tik Tok செயலியை பதிவிறக்கம் (download) செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கியுள்ளது.அதேவேளை TikTok செயலியை பற்றி தனிப்பட்ட புகாரை யாரும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் சட்டங்களுக்கு ஒத்துப்போகாததால் இந்த செயலியை Google Play Store-ல் இருந்து நீக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டவுன்லோடு செய்தவர்கள் மட்டும் தற்போது தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
Comments are closed.