விண்கல் மழைக்குப் பிறகு நிலவில் தண்ணீர்

636

 1,324 total views

சந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த நாள் வரை நிலவு ஒரு வறண்ட கோள் எனவும், நிலவில் தண்ணீர் பனிப்படிவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துவந்தனர்.ஆனால் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் ஆய்வின் படி, நிலவின் மேற்பரப்பில் தற்பொழுது தண்ணீர் எப்படி உருவாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலவில் தண்ணீர் உருவாகியுள்ளது எதிர்கால ஆராய்ச்சிக்கான சாத்தியமான ஆதாரத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதன்படி நிலவில் ஏற்பட்ட விண்கல் மழைக்குப் பிறகு நிலவில் தண்ணீர் உருவாகியுள்ளதென்று நாசா அறிவித்துள்ளது.

லூனார் அட்மோஸ்பியர் டஸ்ட் என்விரோன்மெண்ட் எக்ஸ்ப்ளோரர் (Lunar Atmosphere and Dust Environment Explorer) எல்.ஏ.டி.இ.இ என்ற பெயரில் ஸ்பேஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில், நிலவின் மேற்பரப்பு குறித்த அனைத்து தகவல்களையும் செயற்கைக்கோள் சேகரித்துள்ளது.

ஸ்பேஸ் நிறுவனத்தின் இந்த செயற்கைக்கோள் அக்டோபர் 2013 முதல் ஏப்ரல் 2014 வரை நிலவின் சுற்றுப்பாதையைச் சுற்றி வந்து முழு நிலவின் மேற்பரப்பு விபரங்களைச் சேகரித்துள்ளது. இதன்படி பெரும்பாலான சூழ்நிலையில் நிலவின் வளிமண்டலத்தில் H2O அல்லது OH, கணிசமான அளவில் இல்லை என்று ரிச்சர்ட் எல்பிக் தெரிவித்துள்ளார்.

சந்திரனில் ஏற்பட்ட விண்கல் மழையின் போது போதுமான அளவு நீராவி வெளியாகியுள்ளதை நாசா கண்டறிந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. பின்னர் இந்த விண்கல் மழை முடிந்ததும் நிலவில் தோன்றிய H2O அல்லது OH மறைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்கல் மழையினால் தோன்றிய நீர் மற்றும் நீராவி, விண்கல் மழை முடிந்த பின் மறுபடியும் பணிப் படிவத்திற்குச் சென்றுவிட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு நிலவில் உள்ள நிலவின் புவியியல் மாற்றங்கள் மற்றும் நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு மற்றும் நிலவின் பரிணாம வளர்ச்சி பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

You might also like

Comments are closed.