டிக் டாக் ஆப் ஸ்டோரில் மீண்டும் முதலிடம்

548

 528 total views

இந்தியாவில் டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. இந்த டிக்டாக் செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் புதிது புதிதாக நகைச்சுவை, ஆட்டம் மற்றும் பொழுதுபோக்கு விடியோக்களை உருவாக்கி அவற்றை பதிவிறக்கம் செய்யவோ அல்லது பதிவேற்றம் செய்யவோ முடியும் என்பதால் இந்த செயலிக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்தது.

கடந்த 2019 பிப்ரவரி கணக்கெடுப்பின் படி  இந்தியாவில் மட்டும் சுமார் 240 மில்லியனுக்கும் அதிகமானமுறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமனோர் இந்த செயலியைப் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்வெளிவந்துள்ளது.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சில நாட்களுக்கு முன்னர் டிக் டாக் செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.அதை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து கூகுள் ப்ளே ஸ்டோரில் மிக அதிகமான பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாட்டை 1 வது நிலையை தக்க வைத்துக் கொண்டது மேலும் நம்பர் 1 செயலியாக டிக் டாக் உருவெடுத்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது வெளிவந்துள்ள காலாண்டின் கணக்கெடுபின் படி அதிகம் பதிவிறக்கம் செய்த பட்டியலில் சுமார் 223 மில்லியனுக்கும்  அதிகமான பதிவிறக்கத்தை கொண்டு வாட்ஸ் ஆப் முதலிடத்தை தட்டியது அதை தொடர்ந்து பேஸ்புக் இன் மெஸ்சேன்ஜ்ர் 203 மில்லியனுக்கும் அதிகமான  பதிவிறக்கத்தை கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது அதை தொடர்ந்து டிக் டாக், பேஸ் புக் ,இன்ஸ்டாகிராம் வரிசையில் உள்ளன .

You might also like

Comments are closed.