நம்ம மதுரையில் தொழில் முனைவோர்கான ஓர் அறிய வாய்ப்பு

76

“தொழில்முனைவோர்,புதிய துவக்கங்கள், வியாபார நெட்வொர்க்கிங், தொழில் நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு  அறிய வாய்ப்பு”

TechStars Startup  Weekend ஒரு மாபெரும் ஈவென்டை முதல் முறையாக மதுரையில் நடத்த உள்ளது. உங்களுக்கு ஆப்பிள், GE, சாம்சங், பிலிப்ஸ், பேஸ்புக் அல்லது மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான பில்லியன் டாலர் நிறுவன பயன்பாடு யோசனை உங்களுக்கு இருக்கிறதா?இந்த வாய்ப்பை  தவறவிடாதீர்கள்.

மே 24,25,26 ஆகிய தினங்களில் ELCOT  IT PARK யில் நடைபெற உள்ளது. இது உங்களுக்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரி,டெவலப்பர்களையும் சந்திக்க வாய்ப்பளிக்கிறது மற்றும் உங்கள் யோசனையை உருவாக்க வழிகாட்டிகள் மற்றும் நீதிபதிகள் ஒரு சிறந்த முறையில் ஆலோசனை பெறலாம்.

உங்களில் பலருக்கு ஒரு தொழில் தொடங்கும் யோசனை இருக்கலாம் ஆனால் அதை எப்படி செயலாக்கப்படுத்துவது என்ற கேள்வி இருக்கும்?

இந்த நிகழ்ச்சில் பங்குபெறுவதன் மூலம் நிச்சியமாக அதற்கான விடையை பெற முடியும்.இதில் பங்கேற்கும் அனைவரும் தங்களின் யோசனையை முன்வைக்கவும் பின்பு பங்குபெறும் அனைவரிடமும் வாக்கு சேகரித்து சிறந்த யோசனை தேர்ந்தேடுத்து ஒரு குழு அமைத்து ஆலோசனை வழங்கப்படும்.முதல் ஐந்து குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் இதனுடன் கை கோர்ப்பதில்  blaze ventures பெருமை கொள்கிறது. இதில் பங்கேற்று பயன்பெறுமாறு டெக் தமிழ் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

You might also like

Comments are closed.