புதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள் அறிவுறுத்துகிறது
363 total views
கடந்த பிப்ரவரி 27ம் தேதி மிகவும் முக்கியமான பாதுகாப்பு குறைபாடு ஒன்றை கூகுள் குரோம் உலவியில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடு பழைய குரோம் பதிப்புகள் அனைத்திலும் உள்ளதாகவும் இதனால் பயனாளர்கள் அனைவரும் 72.0.3626.121 எனும் மிகவும்புதிய பதிப்பில் தங்களை புதுப்பித்துக்கொள்ளுமாறு கூகுள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
என்னமாதிரியான பிரச்னை இது?
Google Chrome 72 பதிப்பிற்கு முந்தைய பதிப்பை Windows 7 இயக்குதளத்தில் பயன்படுத்தும் போது, கணினி பயன்படுத்துபவருக்கு தெரியாமலேயே அவரின் கணினியில் உள்ள கோப்புகள் அனைத்தையும் காணும் வண்ணம் அதன் FileReader API ல் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும், இதை மிகவும் தீவிரமான குறைபாடு என கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு அபாய ஆய்வு தெரிவித்துள்ளது.
எப்படி புதுப்பிப்பது?
வழி1: chrome://settings/help இந்த முகவரியை உங்கள் குரோமில் பார்த்தால் நீங்கள் 72.0.3626.121 க்கு முந்தைய பதிப்பை பயன்படுத்தினால் புதுப்பிக்கலாம்.
மைக்ரோசாப்ட் என்ன சொல்கிறது?
விண்டோஸ் 10 அல்லாத கணினிகளில் இந்த புதிய குரோம் புதுப்பிக்க வாய்ப்பு குறைவாக இருக்கும், ஆதலால் கூகுள் நிறுவனமே பழைய விண்டோஸ் பயனாளர்கள் அனைவரையும் புதிய விண்டோஸ் 10க்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ்ல் ஒரு சிறிய புதுப்பிப்பு அனுப்பி இந்த பிரச்சனையை தீர்க்க கூகுளுக்கு உதவலாமா என ஆராய்ந்து வருகிறது.
Comments are closed.